வைகோ
| வை. கோபால்சாமி | |
வைகோ இலண்டனில் உரையாற்றும் காட்சி |
|
| அரசியல் கட்சி | ம.தி.மு.க |
|---|---|
| கட்சி பொறுப்பு | பொதுச்செயலாளர் |
|
|
|
| பிறப்பு | மே 22, 1944 கலிங்கப்பட்டி , திருநெல்வேலி மாவட்டம்[1] |
| கல்வி | கலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை |
| வாழ்க்கைத் துணை |
ரேணுகாதேவி |
| பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
| இருப்பிடம் | சென்னை |
| இணையதளம் | www.vaiko-mdmk.com |
வைகோ (பி. மே 22, 1944; இயற்பெயர்: வை. கோபால்சாமி) தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார். இவர் பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியை கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலை பழி சுமத்தி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்[சான்று தேவை]. அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தொடங்கினார்.
மூன்று முறைநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார்.