தூத்துக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூத்துக்குடி
தூத்துக்குடி
இருப்பிடம்: தூத்துக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°43′12″N 78°07′23″E / 8.72, 78.123அமைவு: 8°43′12″N 78°07′23″E / 8.72, 78.123
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [3]
மாநகராட்சித் தலைவர் சசிகலா புஷ்பா .L
சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. பால் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

2 (2001)

46.75 /km2 (121 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

13.47 சதுர கி.மீட்டர்கள்s (5.20 சதுர மைல்)

60 மீட்டர்s (200 அடி)

இணையதளம் www.municipality.tn.gov.in/Thoothukudi/


தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[4]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

சங்க காலத்தில் தூத்துக்குடி[தொகு]

 • சங்கக் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம் தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.
 • இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர் ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

 • கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
 • அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
 • கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 • ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 • தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.


சிறப்புப் பெயர்கள்[தொகு]

தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்[தொகு]

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. இந்தக் கடற்கரை ஓரத்தில் மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

முத்துநகர்[தொகு]

தூத்துக்குடி கடலில் ஆண்டுக்கு ஒரு முறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம்.பாண்டிய நாட்டின் ஆளுகை உடைய பரதவர்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால் இது முத்துக்குளித்துறை என்று பெயர் பெற்றது.பின்னாட்களில் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயிலுக்கு முத்து நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர்.

துறைமுகம்[தொகு]

டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம்- வரைபடம், 1752இல்
தூத்துக்குடியின் பண்டைய துறைமுகம்- வரைபடம்
ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913இல்

மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்[தொகு]

 • ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
 • உப்பளங்கள்.
 • ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
 • ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
 • தூத்துக்குடி அல்காலி ரசாயன நிறுவனம்.
 • தேங்காய் எண்ணை ஆலைகள்.
 • கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்

பள்ளிகள்[தொகு]

எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி

இங்கு பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன.

 • எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி
 • கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி
 • புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி
 • புனித இன்னாசியஸ் மேல்நிலைப்பள்ளி
 • விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி
 • சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
 • புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித லசாலி மேல்நிலைப்பள்ளி
 • டேஸ் நெவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி.
 • சி.எம். மேல்நிலைப்பள்ளி
 • சக்தி வினாயகர் மேல்நிலைப்பள்ளி
 • ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி
 • விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி
 • காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி
 • கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • ஏ. எம். எம். சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளி
 • புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 • வ.உ.சி.கல்லூரி
 • காமராசர் கல்லூரி
 • புனித மேரி கல்லூரி
 • சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி
 • அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி (மகளிர்)[5]

பொழுதுபோக்கு இடங்கள்[தொகு]

 • ரோச் பூங்கா.
 • துறைமுக கடற்கரை.
 • நேரு பூங்கா.

சங்கர ராமேஸ்வரர் கோயில்[தொகு]

தூத்துக்குடி நகரில் உள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும்.

தூய பனிமயமாதா ஆலயம்[தொகு]

தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் துத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும். இத்தேர்த்திருவிழாவைக் காண சாதி, மத, இனப்பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு.[6]

சிறப்புகள்[தொகு]

 • இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.[7]
 • இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
 • புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
 • இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/18358
 3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
 4. 10வது மாநகராட்சி உதயம்
 5. http://www.annammal.in/
 6. தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம்
 7. இந்திய உப்பின் தரத்தை விளக்கும் ஆங்கில கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துக்குடி&oldid=1609340" இருந்து மீள்விக்கப்பட்டது