ஆழ்வார்திருநகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆழ்வார்திருநகரி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [3]
மக்கள் தொகை 8,876 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

ஆழ்வார்திருநகரி (ஆங்கிலம்:Alwarthirunagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இவ்வூர் நம்மாழ்வார் பிறந்த தலமாகும்.

இவ்வூரின்சிறப்பு[தொகு]

இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

"பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. [4]

தமிழ்தாத்தா உ.வே.சா[தொகு]

இவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா. இவ்வூரில் கிடைத்த ஐங்குறு நூறு குறை ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்ப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார்.[5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8876 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஆழ்வார்திருநகரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆழ்வார்திருநகரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60610267&format=print
  5. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html
  6. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்திருநகரி&oldid=1738969" இருந்து மீள்விக்கப்பட்டது