கயத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கயத்தார்
—  பேரூராட்சி  —
கயத்தார்
இருப்பிடம்: கயத்தார்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053ஆள்கூறுகள்: 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E / 8.9587558; 77.7953053
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [3]
மக்கள் தொகை 9,497 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கயத்தார் அல்லது கயத்தாறு (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வரலாற்று நிகழ்வுகள்[தொகு]

பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மனை
அக்டோபர் 16 , 1799, அன்று இவரை இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.

கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூனைக் காணலாம்


வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் சிலை நிருவப்பட்டு, திரு N.சஞ்சீவ ரெட்டி M.P அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் திரு கு. காமராஜ் M.P அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.

வேளாண்மை சிறப்புகள்[தொகு]

சந்தைகள் : இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும்
வியாழக்கிழமை
சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகைத்தருகின்றார்கள்.

குட்டி குளம்[தொகு]

குட்டி குளம் :
இங்கு மழைக் காலங்களில் மழை நீர்
இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்க்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது.

தெழில்கள்[தொகு]

இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழில்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலை உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் இந்தியப் பிரதமர் திரு. வாச்பாய் அவர்கள் தொடங்கிவைத்தார்.

சமயங்கள்[தொகு]

இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்க்கள் ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.


Om.svg இந்துக் கோயில்கள்

1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில்.

2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலக்கட்டத்தில் எழப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.

3)கயத்தார் ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடாவருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.

P christianity.svg தேவாலயம்

1)புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.

2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

Flag of Pakistan.svg மசூதி(பள்ளி வாசல்)

இந்த ஊரில் புகழ்பெற்ற மசூதி(பள்ளி வாசல்) ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தார் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தார் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கயத்தார்&oldid=1653884" இருந்து மீள்விக்கப்பட்டது