தென்திருப்பேரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தென்திருப்பேரை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆசிஸ்குமார் [3] |
| மக்கள் தொகை | 5,092 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
தென்திருப்பேரை (Thenthiruperai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தென்திருப்பேரை திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் ஆகும்[4].
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். தென் திருப்பேரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தென்திருப்பேரை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இங்கு பிறந்து புகழ் பூத்தோர் [தொகு]
- பி.ஸ்ரீ, எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர்
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ தினமணி
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
|||||||||||||||||||||||