தூத்துக்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூத்துக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தூத்துக்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழத்தட்டாப்பாறை, முடிவைத்தானேந்தல், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி என 4 உள்வட்டங்களும் 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]மேலும் இவ்வட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 71.7%
  • இசுலாமியர்கள் = 3.44%
  • கிறித்தவர்கள் = 24.63%
  • பிறர்= 0.06%

பொருளாதாரம்[தொகு]

இவ்வட்டடத்தின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரிலிருந்து உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வட்டத்தில் ஸ்பிக் உரநிறுவனம், அனல் மின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம், மீன்பிடி துறைமுகம் மற்றும் செப்புக்கம்பி தாயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துக்குடி_வட்டம்&oldid=3106782" இலிருந்து மீள்விக்கப்பட்டது