கீதா ஜீவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா ஜீவன் தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர். தூத்துக்குடியில் 06-05-1970 அன்று பிறந்த இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.