விக்கிரமசிங்கபுரம்
| விக்கிரமசிங்கபுரம் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நகர்மன்றத் தலைவர் | மனோன்மணி |
| மக்கள் தொகை | 48 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 200 மீட்டர்கள்s (660 அடி) |
விக்கிரமசிங்கபுரம் (ஆங்கிலம்:Vikramasingapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 200 மீட்டர் (656 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,101 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். விக்கிரமசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விக்கிரமசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோயில்கள் [தொகு]
- கைலாயநாதர் கோயில் - தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம். இது நவ கைலாயங்கள் என அழைக்கப் பெறும் ஒன்பது நவக்கிரகங்களுக்கான சிவன் கோயில்களில் முதலாவது கோயிலாகும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்து விடும் என்பார்கள். இதனால் இந்த ஊரைப் பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு.
- வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்
உலக்கரிசி வினாயகர் ஆலயம்
பள்ளிகள் [தொகு]
பாபநாசம்தொழிலாளர் நல உரிமைக்கழக மேனிலை பள்ளி
கல்லூரிகள் [தொகு]
- திருவள்ளுவர் கல்லூரி
சிறப்புகள் [தொகு]
- சிங்கைப் பிரபந்தத் திரட்டு எழுதிய நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்த ஊர் இது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "Vikramasingapuram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
|||||||||||||||||||||||