சேலம் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நாடு
பெருநகர சேலம் மாநகராட்சி

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி


ஏனைய மாவட்டங்கள் ·  அரசியல் நுழைவு
சேலம் பெருநகர பகுதி
தமிழக உள்ளாட்சி நுழைவு

சேலம் மாநகராட்சி (Salem City Municipal Corporation) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும். இது, தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்பின்படி, ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய நகரங்களுக்கு அடுத்த ஐந்தாவது பெரிய மாநகராட்சி ஆகும். இம்மாநகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சியாக செயல்படுகின்றது. சேலம் நகராட்சி 1966ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களையும் அறுபது (60) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 312 கோடி ரூபாய் ஆகும்.

சேலம் மாநகராட்சி
வகை
வகை
ஆட்சிக்காலம்
எவருமில்லை
வரலாறு
தோற்றுவிப்பு1994 (1994)
முன்புசேலம் நகராட்சி (1994 - க்கு முன்னர்)
தலைமை
மேயர்
அ. ராமச்சந்திரன், திமுக
2022 முதல்
துணை மேயர்
சாரதா தேவி, திமுக
2022 முதல்
மாநகராட்சி ஆணையாளர்
கிறிஸ்துராஜ், இ.ஆ.ப
மாநகர காவல் ஆணையர்
விஜயகுமாரி, இ.கா.ப
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
  சுயேட்சை: 3
சேலம் மாநகராட்சி வெற்றி பெற்ற கட்சி (வார்டு வாரியாக)
செயற்குழுக்கள்
  • நிதிநிலைக் குழு
  • வளர்ச்சி திட்ட குழு
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் திட்டம்
  • மறுவாழ்வு திட்ட குழு
  • பொதுப்பணி திட்டக் குழு
  • ஸ்மார்ட் சிட்டி பணிக் குழு
  • வரி வசூல்
  • கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு[1]
ஆட்சிக்காலம்
5 வருடங்கள்
தேர்தல்கள்
First-past-the-post
அண்மைய தேர்தல்
2022
அடுத்த தேர்தல்
2027
குறிக்கோளுரை
நகர் நலம் நாடு
கூடும் இடம்
மாநகராட்சி அலுவலகம், சேலம்.
வலைத்தளம்
salemcorporation.gov.in/en

சேலம் மாநகராட்சி எல்லைகள்[தொகு]

01.04.1979 முதல் சூரமங்கலம் நகராட்சி, ஜாரிகொண்டாலம்பட்டி, கன்னங்குறிச்சி பேரூராட்சிகளும் மற்றும் 21 கிராம ஊராட்சிகளும் இணைத்து. இதன் பரப்புளவு 93.34 ச.கி.மீ. கொண்டதாக விரிவுப்படுத்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,032,336 ஆகும்.

மாநகராட்சி தேர்தல், 2022[தொகு]

2022-ஆம் ஆண்டில் சேலம் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் தேர்தலில் திமுகவின் ஆ. இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.[2]

தற்போதைய மாநகராட்சி[தொகு]

மண்டலங்கள்
சூரமங்கலம் அஸ்தம்பட்டி அம்மாப்பேட்டை கொண்டாலம்பட்டி
வட்டங்கள்
60
ஆணையர் மேயர் துணை மேயர் மண்டலத் தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள்
கிறிஸ்துராஜ்

இந்திய ஆட்சிப் பணி

ஏ. இராமச்சந்திரன்

திராவிட முன்னேற்றக் கழகம்

சாரதா தேவி

திராவிட முன்னேற்றக் கழகம்

4 60

நகரத் தந்தைகள் பட்டியல்[தொகு]

வ. எண் உருவப்படம் பெயர் தேர்வான கோட்டம் அரசியல் கட்சி பதவிக் காலம் மாமன்றத் தேர்தல்
1 G. சூடாமணி திராவிட முன்னேற்றக் கழகம் 1996 2001 1ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

1ஆவது
2 சுரேசு குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2001 2006 1ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

2ஆவது
3 எசு.சவுண்டப்பன் 2006 2006 1ஆவது

(210 நாட்கள்)

4 ஜெ. ரேகா பிரியதர்சினி மக்களால் நேரடியாகத் தேர்வு திராவிட முன்னேற்றக் கழகம் 2006 2011 1ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

3ஆவது
5 எசு.சவுண்டப்பன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2011 24 அக்டோபர் 2016 2ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

4ஆவது
மாமன்றமும் மேயர் பதவியும் இல்லை (25 அக்டோபர் 2016 – 2 மார்ச் 2022)
6 ஆ. இராமச்சந்திரன் 6 திராவிட முன்னேற்றக் கழகம் 4 மார்ச் 2022 பதவியில் 1ஆவது

(2 ஆண்டுகள், 24 நாட்கள்)

5ஆவது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மாநகராட்சி&oldid=3855179" இலிருந்து மீள்விக்கப்பட்டது