தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation - TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இத்துறை பல உள்மாநில மற்றும் பிற மாநிலங்களுக்கிடையேயான பேருந்துகளை இயக்குகிறது. மேலும் நகரப் பேருந்துகளையும் இயக்குகிறது.
[தொகு] தோற்றமும் வளர்ச்சியும்
இத்துறையால் இயக்கப்படும் மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 17,800 (2005-06). இன்னும் ஐந்து ஆண்டுகளில் மேலும் 5000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 19,000 பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை, கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலி என ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஏழு மண்டலங்களுக்கும் தனியாக பேருந்து கட்டமைக்கும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.
இத்துறை இந்தியாவில் அதிக லாபம் தரும் துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிராமங்கள் உள்பட போக்குவரத்து வசதியைத் தருகிறது.
இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகப் பேருந்துகள் தான் தனியார் பேருந்துகளுக்கு இணையாக அழகான வடிவமைப்புடனும், பேருந்தினுள் இரு தொலைக்காட்சிப் பெட்டிகள் வசதியுடனும் செயல்படுத்தப்பட்டன.