திருத்தங்கல்
| திருத்தங்கல் | |
| — முதல் நிலை நகராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | டி. என். ஹரிஹரன் [3] |
| நகர்மன்றத் தலைவர் | தனலக்ஷ்மி |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
திருத்தங்கல் (ஆங்கிலம் : en:Thiruthangal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 86 மீட்டர்(482 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,142 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருத்தங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்தங்கல் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கிய தொழில்கள் [தொகு]
திருத்தங்கல் சிவகாசியுடன் முன்பு இணைந்து இருந்தது. சிவகாசியைப் போலவே திருத்தங்கலிலும் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கல் குவாரிகளும் உண்டு.
போக்குவரத்து [தொகு]
சென்னையில் இருந்து செங்கோட்டை வரும் செல்லும் அகல ரயில் பாதை இவ்வூரையும் கடக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் பொதிகை விரைவு வண்டி இந்த ஊர் புகைவண்டி நிலையத்தில் நிற்கும். ஆனைக்குட்டம் , எரிச்சநத்தம், சுக்கிரவார்பட்டி, சில்லையநாயக்கன்பட்டி, செங்கமலபட்டி, வெள்ளியபுரம்,நாரணபுரம், வடமல்லாபுரம், எம் புதுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி என சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக திருத்தங்கல் விளங்குகிறது.
கோவில்கள் [தொகு]
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் ஒருங்கே அமைந்துள்ளது. மலை மேல் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள காளியம்மன் கோவிலிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். பங்குனிப் பொங்கல் மற்றும் தை பூசம் இவ்வூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் வருடாந்திர பண்டிகைகள்.
முக்கிய பிரமுகர்கள் [தொகு]
ஆரோக்யா பால் நிறுவனர் ஆர்.ஜி. சந்திரமோகன் திருத்தங்கலைச் சேர்ந்தவர்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Thiruthangal". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் டிசம்பர் 09, 2012.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
மேலும் பார்க்க [தொகு]
|
|||||||||||||||||