சிவகாசி
| சிவகாசி | |
| — தேர்வு நிலை நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | டி. என். ஹரிஹரன் [3] |
| சட்டமன்றத் தொகுதி | சிவகாசி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 72,170 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 101 மீட்டர்கள்s (331 அடி) |
சிவகாசி (ஆங்கிலம்:Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 72,170 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில் [தொகு]
சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவைப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Sivakasi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
இவர்களின் முக்கியமான வேலை பட்டாசு உற்பத்தி செய்தலே ஆகும்.
|
|||||||||||||||||