அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்கேரியாவின் சோபியா என்னும் இடத்திலுள்ள ஓர் அனல் மின் நிலையம்

மின்சாரம் உற்பத்தி செய்யும் முறைகளில், அனல் மின் உற்பத்தியும் ஒன்றாகும். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, நீராவி உருளையை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள்[தொகு]

  1. காந்திநகர் அனல்மின் நிலையம் - குஜராத்
  2. ராஜீவ் காந்தி அனல்மின் நிலையம் - ஹரியானா
  3. சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் - மத்தியப் பிரதேசம்
  4. துர்காபூர் அனல்மின் நிலையம் - மேற்கு வங்காளம்
  5. பானிபட் அனல்மின் நிலையம் 1 - ஹரியானா
  6. ராஜ்காட் மின் நிலையம் - தில்லி
  7. தூத்துக்குடி அனல்மின் நிலையம் - தமிழ்நாடு

இலங்கையில் உள்ள அனல் மின் நிலையங்கள்[தொகு]

  1. நுரைச்சோலை அனல்மின் நிலையம் - வடமேல் மாகாணம், இலங்கை
  2. சம்பூர் அனல்மின் நிலையம் - திருக்கோணமலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=அனல்_மின்_நிலையம்&oldid=1540758" இருந்து மீள்விக்கப்பட்டது