இராவணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராவணன் பற்றிய ஒரு பாரம்பரிய சித்தரிப்பு
ராஜா ரவிவர்மாவின் ஓவியம்: ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்
இலங்கை திருகோணமலை திருக்கோணேஸ்வரம் மலையில்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், சிவ பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும், இராமனின் மனைவியான சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்கு கடத்திச்சென்று சிறைவைத்ததாகவும், அதனால் வடயிந்திய அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதாகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரமாகும். ஆனால் இலங்கையரைப் பொறுத்தமட்டில் இராவணன் இலங்கையை ஆண்ட ஒரு அரசன் எனும் கருத்தே மேலோங்கியுள்ளது. இலங்கை தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவரிடையேயும் அதே கருத்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இராவணனை இராமனுக்கு எதிரானவனாக இராமாயணம் சித்தரிப்பதனால், இராவணனை ஒரு தீயப்பாத்திரமாக பலர் வரையரை செய்கின்றனர். அதே இராமாயணத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளை தலைச் சிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவே அதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவனாகவும் கருதுகோள்கள் உள்ளன.

பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் கலம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன.

இராவணன் எனும் பெயர் இராவண்ணன் என்பதிலிருந்து மருவியது (இரா=இருள்=கருமை) எனக் கூறப்படும் [1]

பொருளடக்கம்

[தொகு] இராமாயணத்தில் இராவணன்

இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்று, இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய நினைத்தான். இவன் தன் மனைவியாக மண்டோதரியை அடைந்தான் மண்டோதரி கற்பில் சிறந்த பெண்ணாக விளங்கினால் இவளை பத்தினி [[கற்பு|கற்புக்கரசி] என்று போற்றினர்., இவனது அந்தப்புரத்தில் பல பெண்கள இருந்தார்கள் வேதவதி, ரம்பா ஆகியோர் இவர்களில் சிலர் .

[தொகு] குடும்பம்

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார்.ராவணனின் மனைவி மண்டோதரி விபீடணன் கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர். அட்சயகுமாரன், மாயசுரன், இந்திரசித்து ராவணனின் மகன்கள்.

[தொகு] வேத வித்தகன்

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.

[தொகு] இராவணனின் திராவிட மீளுருவாக்கம்

இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே இராமாயணக் காப்பியக் கதையில் பொருந்தும்.மேலும் இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவிலும் உள்ளது .

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. ஞா. தேவநேயப் பாவாணர், "தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை" - ('செந்தமிழ்ச் செல்வி'- சூலை 1931 ), இலக்கணக் கட்டுரைகள், பக் 5,
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்