திண்டிவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திண்டிவனம்
—  தேர்வு நிலை நகராட்சி  —
திண்டிவனம்
இருப்பிடம்: திண்டிவனம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°15′N 79°39′E / 12.25°N 79.65°E / 12.25; 79.65ஆள்கூறுகள்: 12°15′N 79°39′E / 12.25°N 79.65°E / 12.25; 79.65{{#coordinates:12.25|N|79.65|E|type:landmark_region:IN-X_ primary name=

}}

நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு V சம்பத் இ.ஆ.ப [3]
நகராட்சி் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி திண்டிவனம்
சட்டமன்ற உறுப்பினர்

அரிதாஸ் (அதிமுக)

மக்கள் தொகை 67,826 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


58 மீற்றர்கள் (190 ft)

திண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. அதனாலேதான் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.

திருச்சிராப்பள்ளி - விழுப்புரம் - சென்னை சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் செஞ்சி அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல சாலை உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12.25° N 79.65° E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58 மீட்டர் (190 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,826 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டிவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திண்டிவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "Tindivanam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=திண்டிவனம்&oldid=1475816" இருந்து மீள்விக்கப்பட்டது