கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளாங்கண்ணி (ஆங்கிலம்:Velankanni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,144 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேளாங்கண்ணி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேளாங்கண்ணி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் [தொகு]
வேளாங்கண்ணி தமிழகத்திலும் இந்திய நாட்டிலும் தலைசிறந்ததொரு திருத்தலமாக விளங்குகிறது. எல்லாச் சமயங்களைச் சேர்ந்த திருப்பயணிகளும் அங்குச் சென்று, அன்னை மரியாவுக்குப் பொருத்தனைகள் செலுத்தி, காணிக்கைகள் அளித்து, செபங்கள் ஒப்புக்கொடுக்கிறார்கள். நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவது கண்டு நன்றிக் காணிக்கைகளும் வழங்குகிறார்கள்.வேளாங்கண்ணி அன்னை திருத்தலம்
படத் தொகுப்பு [தொகு]
-
வேளாங்கண்ணி பேராலயம் - முன் தோற்றம்
-
வேளாங்கண்ணி பேராலயம் - நீட்சி - முன் தோற்றம்
-
வேளாங்கண்ணி பேராலயம் - நீட்சி - பரந்த பக்கப் பார்வை
-
வேளாங்கண்ணி பேராலயம் - இடது புறத் தோற்றம்
-
வேளாங்கண்ணி பேராலயம் - வலது புறத் தோற்றம்
-
வேளாங்கண்ணி பேராலயம் - மாலைவேளைத் தோற்றம்
-
-
வேளாங்கண்ணி மாதாக் குளம் நோக்கி முழந்தாட்படியிட்டுச் செல்லும் திருப்பயணியர்
-
வேளாங்கண்ணி - ஆராதனை இல்லம்
-
-
நடுத்திட்டில் அமைந்த சிற்றாலயம் - அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்த இடம்
-
வேளாங்கண்ணி - புனித செபஸ்தியார் ஆலயம்
-
வேளாங்கண்ணி - ஆலய அலுவலகம், குருக்கள் உறைவிடம், ஒரு கடை
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.