ஆம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆம்பூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஆம்பூர்
இருப்பிடம்: ஆம்பூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°47′N 78°42′E / 12.78, 78.7அமைவு: 12°47′N 78°42′E / 12.78, 78.7
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு இ.ஆ.ப [3]
நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்ரமணியம்
சட்டமன்றத் தொகுதி ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர்

அஸ்லாம் பாஷா ()

மக்கள் தொகை

அடர்த்தி

113 (2011)

6 /km2 (16 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

17.97 சதுர கி.மீட்டர்கள்s (6.94 சதுர மைல்)

316 மீட்டர்s (1 அடி)

ஆம்பூர் (ஆங்கிலம்:Ambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும், வட்டமுமாகும்

ஆம்பூர் பெயர் காரணம்[தொகு]

'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.[4] ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.[5][6] ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது . மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும் அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம் தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்.

தொழிற்சாலைகள்[தொகு]

ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன . இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். பல காலணிகள் கடைகளும் உள்ளன . இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன . குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.

சட்டமன்ற தொகுதி[தொகு]

வேலூர் மாவட்டத்தில் புதிதாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் வட்டத்தைச் சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை கிராமங்களும், வாணியம்பாடி வட்டத்தைச் சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்?கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்களும், ஆம்பூர் நகராட்சியும் அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12.78° N 78.7° E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 316 மீட்டர் (1036 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும்.மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

கோவில்கள்[தொகு]

1. நாகநாத சுவாமிகள் ஆலயம், ஆம்பூர்

2. சாமுண்டீஸ்வரி கோவில், பெரியாங்குப்பம்

3. கைலாசகிரி முருகன் கோவில், கைலாசகிரி

4. முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை

5. பெருமாள் கோவில், ஆம்பூர்

6. கங்கையம்மன் கோவில், ஆம்பூர்

7. ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர்

8. சாமுண்டியம்மன் கோவில், ஆம்பூர்

9. காளியம்மன் கோவில், ஆம்பூர்

10. கங்கையம்மன் கோவில், சாணாங்குப்பம்

11. பிள்ளையார் கோவில், சாணாங்குப்பம்

12. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம்

மசூதிகள்[தொகு]

1. ஜாமியா மசூதி, ஆம்பூர்

2. முகமதுபுறா மசூதி, ஆம்பூர்

3. சிறிய மசூதி, ஆம்பூர்

4. சந்தாபெட் மசூதி, ஆம்பூர்

தேவாலயங்கள்[தொகு]

1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்

2. சி.எஸ்.ஐ தேவாலயம், ஆம்பூர்

3. தென்னிந்திய தேவாலயம், ஆம்பூர்

4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்

கல்வி நிலையங்கள்[தொகு]

1. மஜாருல் உலூம் கல்லூரி

2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்

3. இந்து பெண்கள் மேனிலைப்பள்ளி

4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி

5. கேஏஆர் பாலிடெக்னிக்

6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி

7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி

8. டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

9. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி

10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி

11. கன்கார்டியா மேனிலைப்பள்ளி

12. ஹபிபியா ஓரியன்டல் பெண்கள் மேனிலைப்பள்ளி

13. அல் அமீன் பள்ளி

14. பிலெசோ மெட்ரிகுலேஷன் பள்ளி

15. பெத்தேல் மெட்ரிகுலேஷன் பள்ளி

16. நடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்

17. இந்து மேனிலைப்பள்ளி, கரும்பூர்

18. கிரெசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

19. சாலமன் ஆரம்ப ஆங்கிலப்பள்ளி, பெரியாங்குப்பம்

20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி

போக்குவரத்து[தொகு]

ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச் 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் (வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர்) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், சென்னை-சோலையார்பேட்டை இரயில் வழியில் உள்ளதால் பல (சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம்) நகரங்களுக்குச்செல்லும் இரயில் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

வரலாறு[தொகு]

ஆம்பூர் போர்

இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- சந்தா சாஹிப் கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார்.

தட்பவெட்பநிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், ஆம்பூர் (2000–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
11.0
(51.8)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[9]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

இந்திய அரசு வழங்கும் பத்மசிறீ பட்டம் பெற்றவர்கள்

1. மெக்கா ரபீக் அஹ்மத் - தொழில் மற்றும் வணிகம் - 2011

2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி - மருத்துவம் - 2011

இணைய தளங்கள்[தொகு]

ஆம்பூர் நகராட்சி இணையதளம்

ஆம்பூர் நெட்

படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).
  5. எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்
  6. ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர் . அதாவது ஆம்பூரில் மாம்பழம் பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது
  7. "Ambur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
  8. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.
  9. "Climatological Information for Tirupattur,India". India Meteorological Department.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்&oldid=1609351" இருந்து மீள்விக்கப்பட்டது