புஞ்சைப் புளியம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புஞ்சைப்புளியம்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புஞ்சைப் புளியம்பட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[3]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சித் தலைவர் பி.எஸ்.அன்பு
மக்கள் தொகை

அடர்த்தி

14,862 (2001)

9,908/km2 (25,662/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 1.5 சதுர கிலோமீற்றர்கள் (0.58 sq mi)
இணையதளம் municipality.tn.gov.in/puliampatti/index.htm

புஞ்சைப் புளியம்பட்டி (ஆங்கிலம்:Punjaipuliampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்நகரம் கோயம்புத்தூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,144 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொன்செய் புளியம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புஞ்சைப் புளியம்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்[தொகு]

இங்குள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் அருகில் சுற்றுலாத்தலமான பவானிசாகர் அணை உள்ளது. அதை அடுத்து பண்ணாரி என்னுமிடத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெரும். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி, தங்கள் நகரத்தின் வாரச் சந்தையே தமிழ் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தை ஒட்டன்சத்திரம் யில் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/197
  3. http://www.tn.gov.in/government/keycontact/18358
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"http://ta.wikipedia.org/w/index.php?title=புஞ்சைப்_புளியம்பட்டி&oldid=1805178" இருந்து மீள்விக்கப்பட்டது