புதுச்சேரி
| புதுச்சேரி Territoire de Pondichéry Union Territory of Pondicherry |
|
| — ஒன்றியப் பகுதி — | |
|
|
|
| அமைவிடம் | |
| நாடு | |
| பிரதேசம் | புதுச்சேரி |
| மாவட்டங்கள் | 4 |
| நிறுவப்பட்ட நாள் | 1 ஜூலை 1963 |
| தலைநகரம் | புதுச்சேரி |
| மிகப்பெரிய நகரம் | புதுச்சேரி |
| ஆளுநர் | இக்பால் சிங்[1] |
| முதலமைச்சர் | ந. ரங்கசாமி[2] |
| துணை நிலை ஆளுநர் | லெப்.ஜெனரல் இக்பால் சிங் (கூடுதல் பொ.) |
| முதலமைச்சர் | ந. ரங்கசாமி[3] |
| சட்டமன்றம் (தொகுதிகள்) | ஓரவை (30) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,73,829 (2வது) (2001[update]) • 1,979 /km2 (5 /sq mi) |
| மொழிகள் | தமிழ், பிரஞ்சு, தெலுங்கு, மலையாளம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 492 கிமீ2 (190 சதுர மைல்) |
| இணையதளம் | www.pon.nic.in |
புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) அல்லது பாண்டிச்சேரி, புதுவை எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.
ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
புதுச்சேரி ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் மாவட்டங்கள் உள்ளன. அரபிக் கடலைச் சார்ந்து மாஹே மாவட்டம் உள்ளனது. பரப்பளவு, மக்கள்தொகை வகையில் புதுச்சேரியும் காரைக்காலும் பெரிய மாவட்டங்கள். இவை தமிழ்நாட்டால் சூழப்பட்டுள்ளவை.
ஏனாம் நிலப்பகுதி, ஆந்திரப் பிரதேச மக்களின் அயலக வளாகமாகவும், மாஹே கேரள மக்களின் அயலக வளாகமாகவும் விளங்குகின்றன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த பரப்பளவு 492 ச.கி. மீ ஆகும். பாண்டிச்சேரியின் பரப்பளவு 293 ச.கி.மீ; காரைக்காலின் பரப்பளவு 160 ச.கி.மீ; மாஹேயின் பரப்பளவு 9 ச.கி.மீ; ஏனாம் பரப்பளவு 30 ச.கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி மொத்த மக்கள்தொகை 1,244,464 ஆகும். 68.31% மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர் இது இந்திய அளவில் 5வது இடமாகும்[4]
தனித் தொகுதிகள் [தொகு]
இந்த வளாகங்கள் ஒன்றுகொன்று தொடர்புகள் இல்லாமல் தனித் தனிப் பகுதிகளாக உள்ளன. புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் இத்தகைய 11 தனித் தொகுதிகள் உள்ளன. இவை முற்றிலும் தமிழ்நாட்டு நிலப்பகுதிகளால் சூழப்பட்ட மிகச்சிறியதான நிலப்பரப்புகள் ஆகும்.
மாஹேயில் இத்தகைய மூன்று நிலப்பரப்புகளில் முற்றிலும் கேரள மாநிலத்தவர் குடி அமர்ந்துள்ளனர். குடிமைப்பட்ட காலத்தில் புதுச்சேரி ஒன்றியப் பகுதி பிரெஞ்சு இந்தியாவின் எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த வழக்கத்திற்கு மாறான புவியியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
ஆறுகள் [தொகு]
புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களுமே கடலோரத்தில் அமைந்துள்ளன. எனவே சில ஆறுகள் புதுச்சேரியில் கடலில் கலந்தாலும் அனைத்துமே புதுச்சேரியில் தொடங்குபவை அல்ல. புதுச்சேரி மாவட்டத்தில் ஐந்து ஆறுகளும் காரைக்காலில் ஏழு ஆறுகளும் மாஹேயில் இரண்டும் ஏனாமில் ஒன்றும் கடலில் கலக்கின்றன.
வரலாறு [தொகு]
புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்குகிறது. இரண்டாம் நூற்றாண்டின் செங்கடல் செலவு, பொடுகெ எனப்படும் சந்தை இடத்தைக் குறித்து பதிகிறது. இந்த இடம் நவீன புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள அரிக்கமேடு (தற்போது அரியாங்குப்பத்தின் பகுதி) என ஜி.டபுள்யூ.பி. ஹன்டிங்போர்டு என்பவர் அடையாளம் காண்கிறார்.
இதே வரலாற்று ஆசிரியர் 1937ஆம் ஆண்டில் அரிக்கமேட்டில் உரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறுகின்றார். 1944 லிருந்து 1949 வரை அந்த இடத்தில் தொல்லியல் ஆழ்ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அந்த இடத்தில் உரோமானியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வணிக மையமாக விளங்கியதைச் சுட்டுவதாகக் குறிப்பிடுகின்றார்.[5]
நகரமைப்பு [தொகு]
புதுச்சேரி ஒன்றியப் பகுதி நகரங்கள் பிரெஞ்சுக்காரகளால் வடிவமைக்கப்பட்டதால் சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். அது குறித்து ஒரு சொலவடை உள்ளது. ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமின் கிழக்குப் பகுதிகளில் வங்காள விரிகுடாக் கடற்கரை உள்ளது. மாஹேயின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலின் கடற்கரை உள்ளது.
கல்வி நடுவம் [தொகு]
ஏனாம் கோதாவரியின் கழிமுகத்திலும், காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன. சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏழு மருத்துவக் கல்லூரிகளும், ஏழு பொறியியல் கல்லூரிகளும், 10 கலை, அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளும் அமைந்துள்ளன. இது ஒரு கல்வி மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் பிரெஞ்சுத் தாக்கம் [தொகு]
புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்சிய வலைமுறை வடிவமைப்பும் செக்டர்களையும் ஒன்றையொன்றை வெட்டும் சாலைகளையும் கொண்டுள்ளது. நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: பிரெஞ்சுப் பகுதி (வில்ல் பிளாஞ்ச்சே அல்லது 'வெள்ளையர் நகர்') மற்றும் இந்தியப் பகுதி (வில்ல் நோய்ர் அல்லது 'கறுப்பர் நகர்'.) பல சாலைகள் இன்றும் தங்கள் பிரெஞ்சுப் பெயர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளன; பிரெஞ்சு பாணியிலான மாளிகைகளையும் காணலாம்.
பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால பாணியில் உயரமான சுவர்களுடனும் நீண்ட சுற்றுச்சுவர்களுனும் உள்ள கட்டிடங்களைக் காணலாம். இந்தியப் பகுதியில் வீடுகள் தாழ்வாரங்களுடன் பெரிய கதவுகளுடன் காணப்படுகின்றன. இந்த பிரெஞ்சு மற்றும் இந்திய பாணி வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த வடிவமைப்புகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. பிரெஞ்சு மொழிச் சொற்கள் பேச்சுவழக்கில் ஊடிருவியிருப்பதை இன்றும் காணலாம்.
புதுச்சேரியில் பல இந்தியர்களும் சிறுபான்மை இந்திய வம்சாவளியல்லாதவர்களும் இன்னமும் பிரெஞ்சுக் கடவுச்சீட்டு வைத்துள்ளனர். இவர்கள், 1954இல் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்சிய அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி பிரான்சிய குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்திதியினர் ஆவர்.
அரசின் அலுவல்முறை மொழிகள் [தொகு]
புதுச்சேரியின் அலுவல்முறை மொழிகளாக தமிழ் (89%), மலையாளம் (4.8%), தெலுங்கு (2.9% ஏனாம்) மற்றும் பிரெஞ்சு (1%). ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மொழிகளின் நிலை மாறுபடுகிறது. வெவ்வேறு மொழிகள் பேசும் மாவட்டங்களிடையே தொடர்பாடலுக்கு நடைமுறை வசதி கருதி பொதுவாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
- தமிழ் - தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் மாவட்டங்களுக்குள்ளும் (புதுச்சேரி , காரைக்கால்) இடையேயும் அரசாணைகள் வெளியிடவும் புதுச்சேரி அரசால் பயன்படுத்தப்படுகிறது.தெலுங்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் பரவலாகப் பேசப்படுகிறது. மலையாளம் மாஹேயிலும் புதுச்சேரியிலும் பேசப்படுகிறது.
- பிரெஞ்சு ஒன்றியப் பகுதியின் அலுவல் மொழிகளில் ஒன்றாக உள்ளது. 1673 முதல் 1954 வரை பிரெஞ்சு இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது. 1956ஆம் ஆண்டு மே 28 அன்று பிரான்சிய அரசுடன் இந்திய ஒன்றியம் கையொப்பிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாக தொடர்கிறது:
மக்களின் சார்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வேறுவிதமாக தீர்மானிக்காதவரை அனைத்து அமைப்புகளின் ஆட்சிமொழியாக பிரெஞ்சு மொழி நீடிக்கும்" [தமிழாக்கம்][6]
வட்டார அலுவல் மொழிகள் [தொகு]
- தமிழ்: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றாகும். இதுவே மிகப் பெரும்பாலோரால் பேசப்படும் மொழியாகும். தமிழ்நாட்டால் சூழப்பட்டுள்ள புதுச்சேரி மாவட்டமும் காரைக்கால் மாவட்டமும் அம்மாநிலத்தின் தமிழ் பண்பாட்டை பகிர்கின்றன.
- பிரெஞ்சு: பிரான்சின் குடிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தமையால் பிரெஞ்சு அலுவல் மொழியாக நீடிக்கிறது.[7]
- தெலுங்கு: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்று. இருப்பினும் இது ஏனாம் (ஆந்திர வட்டாரம்) மாவட்டத்தினுள் மட்டுமே கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. எனவே சரியாகச் சொல்வதென்றால், புதுச்சேரியின் வட்டார அலுவல்மொழியாகவும் ஏனாமின் அலுவல் மொழியாகவும் விளங்குகிறது.
- மலையாளம்: புதுச்சேரியின் அலுவல் மொழிகளில் ஒன்றான இது மாஹேயில் (கேரள வட்டாரம்) மட்டுமே கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது . எனவே சரியாகச் சொல்வதென்றால், புதுச்சேரியின் வட்டார அலுவல் மொழியாகவும் மாஹேயின் அலுவல் மொழியாகவும் விளங்குகிறது.
புதுச்சேரியின் சின்னங்கள் [தொகு]
ஏப்ரல் 16, 2007 அன்று புதுச்சேரி அரசு, அம்மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் வி. வைத்தியலிங்கம் இவற்றை முன்மொழிந்தார்.[8]
| மாநில மலர் | நாகலிங்கப் பூ |
| மாநில மரம் | வில்வ மரம் |
| மாநில பறவை | குயில் |
| மாநில விலங்கு | அணில் |
புதுச்சேரியில் சமயங்கள் [தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 974,345 | 100% |
| இந்துகள் | 845,449 | 86.77% |
| இசுலாமியர் | 59,358 | 6.09% |
| கிறித்தவர் | 67,688 | 6.95% |
| சீக்கியர் | 108 | 0.01% |
| பௌத்தர் | 73 | 0.01% |
| சமணர் | 952 | 0.10% |
| ஏனைய | 158 | 0.02% |
| குறிப்பிடாதோர் | 559 | 0.06% |
புதுச்சேரியில் இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் மற்றும் வேறுபல சிறுபான்மை சமயத்தினரும் வாழ்கின்றனர். கிறித்தவம் தென்னிந்தியாவில் தழைக்க முதல் அடித்தளம் இங்கேயே போடப்பட்டது. இந்து சமயத்துறவியான சிறீ அரபிந்தோவின் அரவிந்தர் ஆசிரமம் இங்குள்ளது. வெள்ளையர் பகுதியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ்பெற்றத் தலமாகும். பல சமயத்தினருக்கும் பொதுவான பன்னாட்டு நகரியமும் ஆய்வுமையமுமான ஆரோவில் இங்கு அமைக்கபட்டுள்ளது. உரோமைய ரோலாண்டு பொது நூலகம் பல அரிய பிரெஞ்சு சமய நூல்களைக் கொண்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக குடிமக்களில் பலரும் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.
கிறித்தவம் [தொகு]
முன்னாள்களில் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி 1674 வரை ஒரு சிறு கிராமமாக இருந்தது. போர்த்துகீசியர்கள் அங்குக் குடியேற்றம் அமைத்து அதை ஒரு நகரமாக வளர்த்தெடுத்தார்கள். கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் சென்னையிலிருந்து வந்த கப்புச்சின் சபைத் துறவிகள் முதலில் அங்கு செயல்பட்டார்கள். பின்னர் 1689இலிருந்து இயேசு சபையினர் அங்கு மறை பரப்பினர். 1773இல் பாரிசு அயல்நாட்டு மறைபரப்பு சபை சமயத் தொண்டு ஆற்றியது. அவ்வமயம் புதுச்சேரியில் சுமார் 30,000 கத்தோலிக்கர் இருந்தனர். ஆயினும் வெளியிலிருந்து மறைபரப்புநர் வருவது குறைந்ததாலும், போர்த்துகீசிய மறைபரப்புநர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாகவும் புதுச்சேரி மறைத்தளம் நலியலாயிற்று.
1845இல் "பாண்டிச்சேரி மறையாட்சித் தளம்" (vicariate) நிறுவப்பட்டது. 1887இல் அது ஒரு உயர்மறைமாவட்டமாக எழுப்பப்பட்டது.[10] இன்று புதுச்சேரியில் வாழ்கின்ற கிறித்தவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர் ஆவர். கிறித்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7% ஆவர்.[11] தமிழகத்திலிருந்து முதன்முறையாக கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்ட கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி புதுவை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.
படக்காட்சியகம் [தொகு]
போக்குவரத்து [தொகு]
தொடர்வண்டி நிலையம் [தொகு]
புதுச்சேரி விழுப்புரம் மற்றும் சென்னையுடன் ஐந்து இணைப்பு தொடர்வண்டி அகல பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, விழுப்புரம், மும்பை, கொல்கத்தா, புது தில்லி முதலிய பல பெருநகர்களுக்கு விரைவு தொடர்வண்டி இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தொடர்வண்டி வழியாக புதுச்சேரியை அடைய நான்கு மணிநேரம் ஆகும்.
சாலைகள் [தொகு]
புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் 2552 கிமீ ஆகும். இது இந்தியாவிலேயே மிக அதிகமானதாகும்.
தமிழகம் மற்றும் இந்திய சாலைகளின் நீளத்தோடு ஒப்பீடு [தொகு]
| சாலைகள் | |||
|---|---|---|---|
| புதுச்சேரியின் சாலைகளின் முழு நீளம் | 2552 கிமீ. | ||
| 1000 சதுர கிமீக்கு சாலைகளின் நீளம் | புதுச்சேரி | தமிழ்நாடு | இந்தியா |
| 4575 | 1572 | 663 | |
சாலைகளின் வகைகள் [தொகு]
| எண் | வகை | நீளம்
(கி.மீ) |
|---|---|---|
| 1 |
தேசிய நெடுஞ்சாலை |
64.450 |
| 2 |
மாநில நெடுஞ்சாலை |
49.304 |
| 3 |
மாநில சாலைகள் |
|
|
புதுச்சேரி – 173.384 |
||
|
காரைக்கால் – 55.162 |
||
|
மாஹே – 19.622 |
||
|
ஏனாம் – 26.460 |
||
|
274.628 |
274.628 |
|
| 4 |
கிராமப்புற சாலைகள் |
|
|
புதுச்சேரி – 164.964 |
||
|
காரைக்கால் – 83.470 |
||
|
248.434 |
248.434 |
|
|
கூட்டுத்தொகை |
636.816 |
விமான நிலையங்கள் [தொகு]
புதுச்சேரியின் விமான நிலையம் இலாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. இது 2012ஆம் ஆண்டு புதுபிக்கப்பட்டு பெரிய விமானங்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது.[12] இப்புதிய விமான நிலையம் ஜனவரி 2013இல் திறக்கப்பட்டு பெங்களூருக்கு செல்லும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.[13] காரைக்காலில் கட்டப்படும் புதிய விமான நிலையம் 2014இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முழுதும் தனியார் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்படும் முதல் விமான நிலையம் இது ஆகும்.[14]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://india.gov.in/govt/ltgovernor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
- ↑ The Periplus of the Erythraean Sea, transl. G.W.B. Huntingford (Hakluyt Society, 1980), p. 119.
- ↑ Le français restera langue officielle des Établissements aussi longtemps que les représentants élus de la population n'auront pas pris une décision différente [பிரெஞ்சு மொழியில்)]
- ↑ "Pondichéry". Tlfq.ulaval.ca. பார்த்த நாள் 2013-01-02.
- ↑ The Hindu: Puducherry comes out with list of State symbols, Dated: April 16, 2007
- ↑ Census of india , 2001
- ↑ Thirusabhacharithram, Rev. Dr. Xavier Koodappuzha
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx
- ↑ "Flight operations await new terminal". சிஎன்என்-ஐபிஎன். 10 மே 2012. http://ibnlive.in.com/news/flight-operations-await-new-terminal/256422-60-118.html. Retrieved 3 ஜூலை 2012.
- ↑ "First flight to Puducherry from Bangalore on January 17". பார்த்த நாள் 5 பெப்ரவரி 2013.
- ↑ "Coimbatore firm to build இந்தியா's first private airport in Karaikal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 மார்ச் 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-03-13/coimbatore/31159347_1_greenfield-airports-private-airport-karaikal. Retrieved 3 ஜூலை 2012.
|
|||||||||||||||||
