சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
|
இக்கட்டுரை |
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.
பொருளடக்கம் |
துவக்கம்[தொகு]
இக்கிளை உயர்நீதிமன்றம் ஜூலை 24 2004 [1] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[1] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[1]மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[1]முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
நீதி முறைமை[தொகு]
இதன் அமர்வுகள் 24.07.2004,[1] முதல் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டது. இதன் நீதிமுறைமைகள் அ நீதிபரிபாலணைகள் உள்ளடக்கிய மாவட்டங்களாக ,[1]கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ,[1]ஆகிய மாவட்டங்களின் நீதிமுறைமைகளை கண்காணிக்கின்றது.
நீதிமன்ற கட்டமைப்பு[தொகு]
இதன் நிர்வாக கட்டமைப்பு 22,929 ச மீ ,[1]கீழ்ப்பரப்பளவில் அமைந்துள்ளது.மன்றத்திற்காக இரண்டு அடுக்கு கட்டுமானமாக 7.20 மீ ,[1]உயரக் கூரைத் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக செயல்பாட்டுக்காக நான்கு அடுக்கு கட்டுமானமாக 3.60 மீ உயரத் தளத்துடன் அமைந்துள்ளது.
மொத்த கீழ்ப்பரப்பளவு 15,209 ச.மீ ,[1]அளவுடன் 12 அறை ,[1]எண்ணிக்கையில் மன்றங்கள், மற்றும் நீதிபதி அறைகள், பார்வையாளர்கள் அறைகளுடன் கூடியவைகளாக அமைந்துள்ளன.
நீதிமன்றம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.,[1] மக்கள் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் விதமாக, உச்ச நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள். அதன் அனைத்து மன்ற நிகழ்வுகளும் வலைத்தளத்துடன்,[1] இணைக்கப்பட்டுள்ளது
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
சென்னை உயர் நீதிமன்றம் இணையம்-மதுரைக் கிளை
மேற்கோள்கள்[தொகு]
|
||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||