இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
|
இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி: |
| முகப்புரை
பகுதிகள்
பின்னிணைப்புகள்
திருத்தங்கள்
|
|
|
இந்தியாவின் அடிப்படை உரிமைகள்- இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,
ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.
இந்த அடிப்படை உரிமைகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். அடிப்படை உரிமையை, நெருக்கடி கால அறிவிப்பின் மூலம், குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.
ஆறு அடிப்படை உரிமைகளாவன[1]
- சம உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலை எதிர்க்கும் உரிமை
- சமய சார்பு உரிமை
- கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
- அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை
[தொகு] மேற்கோள்கள்
|
||||||||||||||||
|
||||||||||||||||||||