ஐடிசி லிமிடெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500875) |
|---|---|
| நிறுவுகை | 1790 (வில்ஸ் அண்ட் கோ என்ற பெயரில்) |
| நிறுவனர்(கள்) | ஹென்றி ஓவர்டோன் வில்ஸ் |
| தலைமையகம் | 37, J.L.நேரு சாலை, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| முக்கிய நபர்கள் | ஒய்.சி. தேவேஷ்வர், சேர்மன் |
| தொழில்துறை | நிறுமக் குழுமம் |
| வருமானம் | ▲ ஐஅ$6 பில்லியன் (2009) |
| பணியாளர் | 26,150 (2009) |
| இணையத்தளம் | ITCportal.com |
ஐடிசி லிமிடெட் (ITC Limited) (முபச: 500875) இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொல்கத்தாவில் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 26,000 க்கும் மேற்பட்ட ஆட்களை பணியமர்த்தியுள்ளது; ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சிகரெட்டுகள், பயணியர் விடுதிகள், காகிதப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி என பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.