இந்தியன் பிரீமியர் லீக்
| இந்தியன் பிரீமியர் லீக் | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் சின்னம் |
|
| நாடு(கள்) | |
| நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
| துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
| முதலாவது போட்டி | 2008 |
| கடைசிப் போட்டி | 2010 |
| சுற்றுப் போட்டி வடிவம் | குழுநிலை, முதல் தோல்வியில் நீக்கம் |
| மொத்த அணிகள் | 8 |
| தற்போதைய வெற்றியாளர் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| அதிக தடவை வெற்றி பெற்றவர் | ராஜஸ்தான் ராயல்ஸ் |
| தகைமை | இருபது20 சம்பியன்ஸ் லீக் |
| அதிகூடிய ஓட்டங்கள் | |
| அதிகூடிய விக்கெட்டுகள் | |
| வலைத்தளம் | www.iplt20.com |
இந்தியன் பிரீமியர் லீக் ஒரு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். புதிதாக துவக்கபட்ட இந்தியன் கிரிகட் லீக்கிற்கும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைட் தொடர்ந்து இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் இந்தியன் பிரீமியர் லீக் உருவாக்கப்பட்டது.[3] இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுவாரியத்தின் துணைத் தலைவரான லலித் மோடி இந்தியன் பிரீமியர் லீக்கின் தலவராகவும் அதன் ஆணையராகவும் பதவி வகிக்கிறார்.
2010 ஆம் ஆண்டின் மூன்றாவது இந்தியன் பிரீமியர் லீக் பருவப் போட்டிக யூடியூப்பில் நேரடியாக ஒளிஒலிபரப்பட்டன். ஒரு விளையாட்டுப் போட்டியின்று யூடியூப்பில் நேரடியாக ஒளிஒலி பரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[4] 2010 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் 4.13 பில்லியன் அமெரிக்க டாலர் பெருமதி உள்ளதாக மதிப்பிடப்பட்டது.[5][6]
வரலாறு [தொகு]
முதற் பருவம் [தொகு]
2008, ஏப்ரல் 18 ஆம் நாள் பெங்களூர் நகரில் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதற் பருவம் துவங்கியது. 46 நாட்கள் நீடித்த தொடரில் திட்டமிடப்பட்டிருந்த 59 ஆட்டங்களில் 58 நடைபெற்றன, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. குழுநிலைப் போட்டிகளின் போது ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகள் ஒவ்வொன்றையும் தமது இல்ல அரங்கிலும் எதிரணியின் இல்ல அரங்கிலும் எதிர்த்து ஆடின. குழுநிலைப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கு பெற்றன.முதற் பருவத்தின் வெற்றியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிவாகைச் சூடியது.
இரண்டாம் பருவம் [தொகு]
இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது பருவம் 2009 ஆம் ஆண்டின் இந்தியாப் பொதுத் தேர்தலுடன் ஒரே காலத்தில் இடம்பெறவிருந்தது. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளால், போட்டித் தொடர் தென்னாப்பிரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்டது. போட்டி வடிவம் முதற் பருவத்தைப் ஒத்து காணப்பட்டது.இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டம் பருவத்தின் வெற்றியாளராக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினர் வெற்றி வாகை சூடினர்.
மூன்றாம் பருவம் [தொகு]
இந்தியன் பிரீமியர் லீக்கின் மூன்றாவது பருவம் 2010 சனவரி மாதம் வீரர்களின் ஏலத்துடன் துவங்கியது. 66 வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டாலும் 11 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள்.[7]. பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எவருமே ஏலத்தில் எடுக்கப்படவில்லை.[8] பாக்கிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் இதனை பாக்கிஸ்தான் வீரர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறியதை அடுத்து இது பன்னாட்டு அரசியல் விவகாரமாக மாற்றம் பெற்றது.[9]. இந்திய வெளிவிகார அமைச்சர் வீரர் தெரிவிற்கும் இந்திய அரசிற்கும் தொடர்பேதும் கிடையாது என விளக்கமளித்தார்.[9]. ஆந்திராவில் நிலவிவரும் அரசியல் சீரற்ற நிலை காரணமாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியினரின் இல்ல அரங்குகளான ஐதராபாத், விசாகப்பட்டினம் நகர்களில் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கின் மூன்றாம் பருவத்தின் பட்டத்தை கைப்பற்றியது.
]] அணியினர் வெற்றி வாகை சூடினர்
நான்காம் பருவம் [தொகு]
2010 மார்ச் 21 ஆம் நாள் புனே, கொச்சி ஆகிய இரு நகரங்கள் இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு புதிய அணிகளாக அறிவிக்கப்பட்டன. இவை 2011 ஆண்டின் நான்காவது பருத்திலிருந்து இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைந்துக்கொள்ளும். இதன் படி நான்காம் பருவத்தில் மொத்தம் 10 அணிகளும் 94 போட்டிகளும் நடைப்பெறும்.கடைசியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐந்தாம் பருவம் [தொகு]
இம்முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியனாகியது.
ஆறாம் பருவம் [தொகு]
ஆறாம் பருவத்தின் ஆரம்ப விழா கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் இடம் பெற்றது. இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டெயர் டெவில்ஸ், பூனே வோரியர்ஸ் ஆகிய 09 அணிகள் போட்டியிடுகின்றன. முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டெயர் டெவில்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
அணி உரிமையாளர்கள் [தொகு]
எட்டு அணி உரிமைகளுக்கான ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் ஜனவரி 24, 2008 அன்று அறிவிக்கப்பட்டது.[10] ஏலந்தின் போது குறைந்தது 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைகுமென கணிக்கப்பட்டிருந்தாலும் ஏலம் 723.59 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டித் தந்திருந்தது.[11]
2010 மார்ச் 21 ஆம் நாள் புனே கொச்சி ஆகிய இரு நகரங்கள் இன்ந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு புதிய அணிகளாக அறிவிக்கப்பட்டன. இவ்வணிகலுக்கான குறைந்த விலையாக 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறிக்கப்பட்டிருந்தன. புனே அணி 370 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும், கொச்சி அணி 333.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் விலைப்போனது.[12] இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது ஏலத்தில் 703 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது.
| அணி உரிமை | உரிமையாளர்(கள்) | தலைவர் | விலை (டாலர்) | விலை (ரூபாய்) | அமைவிடம் |
|---|---|---|---|---|---|
| மும்பை இந்தியன்ஸ் | நீதா அம்பானி (ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்) | சச்சின் டெண்டுல்கர் | $ 112.9 m | Rs. 441 Cr | |
| பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | விஜய் மல்லையா (UB Group) | அனில் கும்ப்ளே | $ 111.6 m | Rs. 440 Cr | |
| டெக்கான் சார்ஜர்ஸ் | டெக்கான் கிரானிக்கிள் (Venkat Ram Reddy) | அடம் கில்கிறிஸ்ற் | $ 107.0 m | Rs. 422 Cr | |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | இந்தியா சிமெண்ட்ஸ் (என்.சீனிவாசன்) | மகேந்திர சிங் தோனி | $ 91.90 m | Rs. 359 Cr | |
| டெல்லி டேர்டெவில்ஸ் | ஜிஎம்ஆர் | கௌத்தம் காம்பீர் | $ 84.0 m | Rs. 331 Cr | |
| கிங்சு இலெவன் பஞ்சாபு | நெஸ் வாடியா (பாம்பே டையிங்), பிரீத்தி ஜிந்தா, மோஹித் பர்மன் (டாபர்) மற்றும் கரன் பால் (ஏபிஜே சுரேந்திரா குழுமம்) | குமார் சங்கக்கார | $ 76.0 m | Rs. 300 Cr | |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் (ஷாருக் கான், கௌரி கான், ஜூஹி சாவ்லா மற்றும் ஜே மேத்தா) | சௌரவ் கங்குலி | $ 75.1 m | Rs. 296 Cr | |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | எமர்ஜிங் மீடியா (லாச்லன் முர்டோக், ஏ.ஆர். ஜா மற்றும் சுரேஷ் செல்லாராம்), ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா | ஷேன் வோர்ன் | $ 67.0 m | Rs. 264 Cr | |
| புனே | Sahara Adventure Sports Group | TBD | $ 370 m | Rs. 1702 Cr | |
| கொச்சி | Rendezvous Sports World Limited | TBD | $ 333.3 m | Rs. 1533 Cr |
வீரர்கள் ஒப்பந்தமாதல் [தொகு]
2008 பிப்ரவரி 20 ஆம் நாள் இந்தியன் பிரீமியர் லீக்கின் அணிகளுக்கிடையில் விளையாட்டு வீரர்களை பங்கிடும் நோக்கிலான முதலாவது ஏலம் நடைப்பெற்றது.தெரிவுச் செய்யப்பட்ட சில பிரபல இந்திய துடுப்பாட்ட வீரகளுக்கு ஐக்கன் தகமை வழங்கப்பட்டு ஏலமற்ற அவர்கள் அணிகளுக்கு பகிந்தளிக்கப்பட்டனர். ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்,வீரேந்தர் சேவாக் ஆகியோருக்கே ஐக்கன் தகமை வழங்கப்பட்டது. விவிஎஸ் லட்சுமணுக்கு துவக்கத்தில் ஐகான் தகமை வழங்கப்பட்டிருந்தது, வீரர்களை ஏலம் எடுக்க தனது அணி (டெக்கான் சார்ஜர்ஸ்) கூடுதல் தொகை ஒதுக்க வழிசெய்யும் வண்ணம் பின்னர் அவர் தானாக முன்வந்து அத்தகமையைத் திருப்பியளித்து விட்டார்.[13] இரண்டாவது பருவத்திற்கும் ஏலங்கள் நடந்தன, ஆனால் பருவ ஓய்வில் அணி உரிமையாளர்கள் கட்டற்ற நிலையில் வீரர்களை ஒப்பந்தம் செய்தமையால், தரப் பட்டியலில் கீழிடத்தில் இருக்கும் அணிகளுக்கு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் முதலாவதாக வாய்ப்பு வழங்கும் வகையிலான ஒரு முறைக்கு கோரிக்கைகள் எழுந்தன.
தொலைக்காட்சி உரிமங்களும் அனுசரனைகளும் [தொகு]
ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துக்கு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டித் தருமென மதிபீடுச் செய்யப்பட்டுள்ளது.2017 ஆம் ஆண்டு வரை இவ்வனைத்து வருவாயும் ஒரு நடுவச் சேர்மத்தில் வைக்கப்பட்டு 40% இந்தியன் பிரீமியர் லீக்க்கிற்கும் 54% அணி உரிமையாளர்களுக்கும் 6% பரிசுத் தொகையாகவும் பகிரப்படும். 2017 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பகிரப்படும் விகிதம் 50% இந்தியன் பிரீமியர் லீக்க்கிற்கும் 45% அணி உரிமையாளர்களுக்கும் 5% பரிசுத் தொகையாகவும் மாற்றப்படும்.
தொலைக்காட்சி உரிமங்கள் [தொகு]
இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனமும் சிங்கப்பூரின் வேர்ல்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக 2008 சனவரி 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.[14] இச்சாதனைத் தொகை ஒப்பந்தம் பத்து ஆண்டுகளுக்கு 1.026 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஒப்பந்தத்தின் பகுதியாக, கூட்டு நிறுவனம் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துக்கு 918 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளுக்கும் 108 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இந்த போட்டித் தொடர் விளம்பரத்திற்கும் அளிக்கும்.[15] இந்த ஒப்பந்த விதிகளை சோனி நிறுவனம் மீரியதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்தியன் பிரீமியர் லீக் வழக்கு தொடர்ந்து, தீர்ப்பு இந்தியன் பிரீமியர் லீக் சாதகமாகக் கிட்டியது. நீதிமன்றத்தில் வழக்கு தோல்வியுற்றதையடுத்து, சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இதன் படி சோனி தொலைக்காட்சி நிறுவனம் 10 ஆண்டுகளுக்கான தொகையாக 87 பில்லியன் இந்திய ரூபாயை அளிக்க முன்வந்தது. இந்தியப் பொதுத்தேர்தலுடன் ஒரே காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 2009 ஆண்டு பருவம் அமைந்தமையால் போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படுவதாக இந்தியன் பிரீமியர் லீக் முடிவெடுத்தது. போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் தென்னாப்பிரிக்காவில் நடத்தும் போது ஏற்படும் மேலதிக செலவை இந்தியன் பிரீமியர் லீக் அளிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தது. இதனால் இந்தியன் பிரீமியர் லீக்கின் 2008 ஆண்டு பருவத்தைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த அளவு கூடுதல் செலவாகும் என்பதால் அந்த செலவைச் சமாளிப்பதற்கு அவசியமான பணம் தேவைப்பட்டதே சோனி தொலைக்காட்சி நிறுவனத்திடம் இத்தகையதொரு பெரும் தொகை பெறப்பட்டமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி உரிம விற்பனையில் கிட்டும் வருமானத்தில் 20% இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு 8% பரிசுத் தொகையாகவும் 72% அணி உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 2012 ஆம் ஆண்டுகுப் பின்னர் இந்தியன் பிரீமியர் லீக்கின் பொதுப்பட்டியல் நிறுவனமாக்கப்பட்டு அதன் பங்குகள் பட்டியலிடப்படும். அண்மைய தகவலின் படி இந்தியன் பிரீமியர் லீக் பட்டியலிப்பட மாட்டாது.[16]
சோனி தொலைக்காட்சி நிறுவனமும் வேர்ல்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் ஒளிபரப்பு உரிமைகளை புவியியல் பகுதிகளாக பிரித்து வேறு நிறுவனங்களுக்கு மறுவிற்பனை செய்தது. உலகெங்கும் பெறப்பட்ட ஒளிபரப்பு உரிமைகளின் ஒரு சுருக்கம் கீழ்வருமாறு.
| வென்ற ஏலதாரர் | ஒளிபரப்பு உரிமப் பகுதி | ஒப்பந்த விதிகள் |
|---|---|---|
| சோனி தொலைக்காட்சி நிறுவனமும் வேர்ல்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் |
10 ஆண்டுகள் 7 பில்லியன்[14] | |
| வன் தொலைக்காட்சி | 5 ஆண்டுகள் 10-15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்[17] | |
| ஸ்கை நெட்வொர்க் டெலிவிஷன் | விதிகள் வெளியிடப்படவில்லை | |
| பி.சி.சி.டப்லிவ். | 2 ஆண்டுகள் விதிகள் வெளியிடப்படவில்லை. | |
| ஸ்டார் அப் | விதிகள் வெளியிடப்படவில்லை | |
| அஸ்டிரோ | விதிகள் வெளியிடப்படவில்லை | |
| சுப்பர் ஸ்போர்ட் |
நடு ஆப்பிரிக்கா | விதிகள் வெளியிடப்படவில்லை |
| அரப் டிஜிட்டல் டிஸ்ட்ரீபியூசன் | 10 ஆண்டுகள் விதிகள் வெளியிடப்படவில்லை.[18] | |
| கெயோ சூப்பர் |
விதிகள் வெளியிடப்படவில்லை | |
| வில்லோ டி.வி | வடக்கு அமெரிக்கா தொலைக்காட்சி, வானொலி, இணைய ஒளிபரப்பு உரிமம். | 5 ஆண்டுகள் விதிகள் வெளியிடப்படவில்லை.[19] |
| டைரெக்ட் டி.வி | விதிகள் வெளியிடப்படவில்லை | |
| ஏ.டி.வி |
5 ஆண்டுகள் விதிகள் வெளியிடப்படவில்லை.[20] | |
| ஸ்போர்ட்ஸ் மெக்ஸ் | விதிகள் வெளியிடப்படவில்லை | |
| ஐ.டி.வி |
விதிகள் வெளியிடப்படவில்லை |
அனுசரனைகள் [தொகு]
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமானத் தொழில் குழுமமான டிஎல்எஃப் குழுமம் இந்த போட்டித் தொடருக்கான 5 ஆண்டுகளுக்கு முதன்மை அனுசரனையாளராக இருக்கும் பொருட்டு 50 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை அளித்திருக்கிறது. இதன் படி தொடர் "டி.எல்.எஃப்.இந்தியன் பிரீமியர் லீக்" என அழைக்கப்படும்.[21]
கிங்ஃபிஷர் வான் போக்குவரத்து நிறுவனம் 1.06 பில்லியன் இந்திய ருபாய் செலுத்தி இந்தியன் பிரீமியர் லீக்க்கின் உத்தியோகப்பட்ச நடுவர் அனுசரனையாளராக ஒப்பந்தம் செய்து கொண்டது. இவ்வொப்பந்தத்தின் படி, அனைத்து நடுவர்களின் சீருடைகளிலும் மூன்றாவது நடுவரின் முடிவுகள் வெளியாகும் போது பாரிய திரைகளிலும் கிங்ஃபிஷர் வான் போக்குவரத்து நிறுவனத்தின் வர்த்தகச் சின்னத்தை காணப்படும்.[22]
ஈரோ ஒண்டா 5 ஆண்டு அனுசரனையாக 22.5 மில்லியன் இந்திய ருபாய் செலுத்தியுள்ளது. பெப்சி 5 ஆண்டு அனுசரனையாக 12.5 மில்லியன் இந்திய ருபாய் செலுத்தியுள்ளது. கிங்நஃபிஷர் நிறுவனம் 5 ஆண்டு அனுசரனையாக மில்லியன் 26.5 மில்லியன் இந்திய ருபாய் செலுத்தியுள்ளது.[23]
வருவாயும் இலாபமும் [தொகு]
ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள தகவுரைஞ்சு நிறுவனமான பிராண்ட் பைனாஸ், 2010 ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் 4.13 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.[24] இதே நிறுவனம் 2009 ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் 2.01 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியுள்ளதாக மதிப்பிட்டது.[25]
அணிகள் ஈட்டிய இலாபம் பற்றிய சீரான தகவல்கள் இல்லை. ஒரு பகுப்பாய்நரின் கருத்துப்படி 4 அணிகள் 2009 ஆண்டு இலாபம் பெற்றது.[26] இலண்டன் டைம்ஸ் சங்சிகையின் கருத்துப்படி பஞ்சாப் அணியை தவிர்ந்த ஏனைய அணிகள் இலாபமீட்டியுள்ளன.[27]
2010 ஆம் ஆண்டு 80 வணிக பெருட்களுக்கு உத்தியோகப்பட்ட தகமை வழங்கும் ஒப்பந்தங்கள் கிட்டும் என இந்தியன் பிரீமியர் லீக் எதிர்பாக்கிறது. சுவிட்சர்லாந்தின் பாண்டலியர் நிறுவனத்துடன் உத்தியோகப்பட்ச கடிகாரங்களைச் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.[28]
அதிகாரமளிக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் நகர்பேசி செயலிகள் [தொகு]
டி.சி. ஐ. மொபைல் ஸ்டூடியோ நிறுவனமும் சிங்கப்பூரின் சிக்மா வென்சர்ஸ் நிறுவனமும் இணைந்து 2017 பருவம் உடப்ட 8 ஆண்டுகளுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான நகர்பேசி செயலிகளை ஆக்குவதற்கான முழு உரிமைகளையும் பெற்றுக்கொண்டன. தற்போது இந்நிறுவனங்கள் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான நகபேசி செயலிகள் வெளியிடப்பட்டுள்ளன.[29]
உலகளாவிய பின்பற்றல் [தொகு]
ஆண்டொன்றில் இந்தியாவில் ஆண்டில் நடைப்பெறும் மிகப் பிரபல நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக் வளர்ந்துள்ளது.[30].
இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியன் பிரீமியர் லீக் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாகிஸ்தானில் வரவேற்பு "மிகப்பிரம்மாண்டமானதாக" இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பின்பற்றுபவர் கூடுதலாக உள்ளனர்.[31] ஜியோ சூப்பர் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்புகிறது. இதேபோல் இலங்கையிலும் வங்க தேசத்திலும் இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்திலும் வாழும் தென்னிந்தியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் இந்தியன் பிரீமியர் லீக் பாரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் பிரபலமடைந்து வருகின்றது.
2008 ஆண்டு பருவத்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமிடையில் நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தை 24 மில்லியனுக்கும் சற்றே கூடுதலான பேர் தொலைக்காட்சியில் பார்த்துள்ளதாகவும் அதே பருவத்தில் ஒரு அறைஇறுதியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகக்கும் இடையிலான போட்டியை 20 மில்லியனுக்கும் சற்றே கூடுதலான பேர் பார்த்துள்ளதாகவும், மற்றைய அறைஇறுதியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குமிடையிலான போட்டியை 19 மில்லியன் பேர் கண்டுகளித்தனர் என்றும் கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.[32]
விதிமுறைகள் [தொகு]
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
போட்டித்தொடருக்கான அதிகாரப்பூர்வ விதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு அணி உரிமையாளர் ஒரு வீரரை சேர்ப்பதற்கு ஐந்து வழிகள் உள்ளன. வருடாந்திர ஏலத்தில், உள்நாட்டு வீரர்களை வாங்குதல், இதுவரை விளையாடியிராத வீரர்களை ஒப்பந்தம் செய்வது, பரிவர்த்தனை மூலம், மற்றும் மாற்றுவீரர்கள் வாங்குவதன் மூலம்.[33][34] பரிவர்த்தனை சாளரத்தில் ஒரு வீரரின் சம்மதம் இருந்தால் மட்டுமே அவர் மீதான பரிவர்த்தனை நிகழ வேண்டும். பழைய ஒப்பந்த விலைக்கும் புதிய ஒப்பந்த விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை அணி உரிமையாளர் செலுத்த வேண்டும். புதிய ஒப்பந்தம் பழையதைக் காட்டிலும் அதிகமான தொகைக்கு மேற்கொள்ளப்படுமானால், அப்போது வித்தியாசத் தொகை வீரருக்கும் வீரரை விற்கும் அணி உரிமையாளருக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும்.[35]
அணியின் வடிவ விதிகளில் சில பின்வருமாறு:
- குறைந்தபட்சம் 16 வீரர்கள் ஒரு உடற்பயிற்சி ஆலோசகர் மற்றும் ஒரு பயிற்சியாளர் கொண்ட குழு.
- அணியில் 8 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இருக்கக் கூடாது, களத்தில் இறங்கும் 11 பேர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. 2009 ஆம் ஆண்டிற்கான தொடருக்கு அணி வீரர்கள் குழுவில் 10 வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. களத்தில் இறங்கும் 11 பேரில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மிகக் கூடாது என்பது மாறாமல் தொடர்கிறது.
- ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 8 உள்நாட்டு வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு அணியிலும் பிசிசிஐ 22 வயதுக்கு குறைந்த வீரர்கள் பட்டியலில் இருந்து குறைந்தபட்சம் 2 வீரர்கள் இருக்க வேண்டும்.
"ஐகான்" அந்தஸ்து வழங்கப்பட்ட வீரர்கள்: சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் மற்றும் வீரேந்திர சேவாக். முதலாவது வீரர் ஏலத்தில் ஒரு அணி உரிமையாளர் செலவிடக் கூடிய அதிகப்பட்சத் தொகை 5மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 22 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர் தொகையும், மற்றவர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர் தொகையும் குறைந்தபட்ச வருடாந்திர சம்பளமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஐகான் வீரர்களுக்கு, அந்த அணியின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் வீரரை விட 15% கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் [தொகு]
தனது இணையதளங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கனடா நாட்டு நிறுவனமான லைவ் கரண்ட் மீடியா இன்க் நிறுவனத்துடன் ஐபிஎல் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியது, அடுத்த 10 ஆண்டுகளுக்கான குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை பேசப்பட்டிருக்கிறது.[36] போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் www.iplt20.com ஆகும்.
புள்ளிவிவரங்களும் சாதனைகளும் [தொகு]
ஹேட்ரிக்குகளின் பட்டியல் [தொகு]
| எண்: | சீசன் | தேதி : | ஹேட்ரிக் எடுத்தவர் | ஆட்டமிழந்தவர்கள் | எந்த அணிக்காக | எந்த அணிக்கு எதிராக | அணியின் ஹேட்ரிக் மொத்தம் |
| 1 | 2008 இந்தியன் பிரீமியர் லீக் | 10 மே 2008 | லட்சுமிபதி பாலாஜி | இர்பான் பதான், பியூஷ் சாவ்லா, விஆர்வி சிங் | சென்னை சூப்பர் கிங்ஸ் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 1 |
| 2 | 2008 இந்தியன் பிரீமியர் லீக் | 15 மே 2008 | அமித் மிஷ்ரா | த்வாரகா ரவி தேஜா, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா | டெல்லி டேர்டெவில்ஸ் | டெக்கான் சார்ஜர்ஸ் | 1 |
| 3. | 2008 இந்தியன் பிரீமியர் லீக் | 18 மே 2008 | மகாயா நிடினி | சவுரவ் கங்குலி, டெபாப்ரதா தாஸ், டேவிட் ஹஸி | சென்னை சூப்பர் கிங்ஸ் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 2 |
| 4 | 2009 இந்தியன் பிரீமியர் லீக் | 1 மே 2009 | யுவராஜ் சிங் | ராபின் ஊத்தப்பா, மார்க் பவுச்சர், ஜாக்வஸ் காலிஸ் | கிங்ஸ் XI பஞ்சாப் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 1 |
| 5 | 2009 இந்தியன் பிரீமியர் லீக் | 6 மே 2009 | ரோகித் சர்மா | அபிஷேக் நாயர், ஹர்பஜன் சிங், ஜேபி டுமினி | டெக்கான் சார்ஜர்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | 1 |
| 6. | 2009 இந்தியன் பிரீமியர் லீக் | 17 மே 2009 | யுவராஜ் சிங்(2வது ஹேட்ரிக்) | ஹெர்செல் கிப்ஸ், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், வேணுகோபால் ராவ் | கிங்ஸ் XI பஞ்சாப் | டெக்கான் சார்ஜர்ஸ் | 2 |
வருவாய் மற்றும் லாபங்கள் [தொகு]
ஐபிஎல் முதலாவது சீசன் மூலம் இந்திய அரசுக்கு 91 கோடி ரூபாய் வரி வருவாயாக கிட்டியது.[37][37]
அணி உரிமையாளர் சம்பாத்தியம் [தொகு]
ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஜூன் 1, 2008 அன்று முடிவடைந்த முதலாவது சீசன் பெரும் வெற்றியாகும். முதலாவது சீசனில் அணி உரிமையாளர்கள் அசலைக் கூட எட்டுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை, ஏனென்றால் அணிக்கான செலவாக அவர்கள் பெரும் தொகைகளை செலவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் கீழேயிருக்கும் அட்டவணையைக் கண்டால் இவர்களில் சிலர் ஏற்கனவே முதலாம் சீசனில் லாபம் ஈட்டியிருப்பதைக் காண முடியும்.[38]
| அணி உரிமை | வருவாய் | செலவினங்கள் | லாபம்/இழப்பு (ரூபாய் கோடிகளில்) | ||
|---|---|---|---|---|---|
| மும்பை இந்தியன்ஸ் |
|
|
மொத்த இழப்பு - -16 | ||
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
|
|
மொத்த இழப்பு - -43 | ||
| டெக்கான் சார்ஜர்ஸ் |
|
|
மொத்த இழப்பு - -18 | ||
| சென்னை சூப்பர் கிங்ஸ் |
|
|
மொத்த இழப்பு - -0.2 | ||
| டெல்லி டேர்டெவில்ஸ் |
|
|
மொத்த இழப்பு - -6.6 | ||
| கிங்ஸ் XI பஞ்சாப் |
|
|
மொத்த இழப்பு - -2.4 | ||
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
|
|
மொத்த லாபம் - +13 | ||
| ராஜஸ்தான் ராயல்ஸ் |
|
|
மொத்த லாபம் - +6 |
- அனைத்து இலக்கங்களும் இந்திய ரூபாயை கோடிகளில் குறிக்கின்றன (1 கோடி = 10,000,000 ரூபாய் = 201,176 அமெரிக்க டாலர்கள் = 152,444 யூரோ ஜூன் 1, 2008[39] நிலவரத்தில்)
சர்ச்சைகள் [தொகு]
ஐபிஎல்லின் காரணத்தால் உலகெங்கும் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களுடன் பல மோதல்களை சந்திக்கும் நிலையை பிசிசிஐ எதிர்கொண்டது. ஐபிஎல் சீசன் நிகழும் அதே காலத்தில் ஒப்பந்த வீரர்களின் தேசிய அணியின் ஆட்டங்களும் நிகழும் சமயத்தில், வீரர்கள் தங்கள் தேசிய அணியின் சர்வதேச சுற்றுப்பயணங்களில் விளையாட இயலும்படி செய்ய வேண்டும் என்பதே பிரச்சினையின் சாரம். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ஐபிஎல் சீசனுக்காக பிரத்யேகமாக சர்வதேச சுற்றுப்பயண நிகழ்வு கால அட்டவணையில் ஐசிசி காலம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தது. அடுத்து நடந்த ஐசிசி கூட்டத்தில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[40][40]
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடனான மோதல்கள் [தொகு]
முதலாவது ஐபிஎல் தொடர் கவுன்டி சாம்பியன்சிப் மற்றும் நியூசிலாந்து அணியின் இங்கிலாந்து பயணம் ஆகியவை நடைபெற இருந்த அதே சமயத்தில் வந்ததால், கலந்து கொள்ளும் வீரர்கள் குறித்த பிரச்சினையை இசிபி மற்றும் கவுன்டி கிரிக்கெட் கிளப்புகள் பிசிசிஐயிடம் எழுப்பின. ஐபிஎல்லில் விளையாடுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும் வீரர்களுக்கான ஆட்சேபமின்மை சான்றிதழ்களில் தாங்கள் கையொப்பமிடப் போவதில்லை என்பதை இசிபி தெள்ளத்தெளிவாய் கூறி விட்டது. கவுன்டி கிளப் தலைவர்களும் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் தங்கள் கிளப்புகளுக்கு அளித்துள்ள உறுதிமொழியை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என்று தெளிவாய்க் கூறி விட்டனர். இதன் விளைவாக, ஐபிஎல்லின் 2008 சீசனுக்கு ஒப்பந்தமான ஒரே இங்கிலாந்து வீரராக டிமிட்ரி மஸ்கரேனஸ் மட்டும் தான் இருந்தார்.[41]
ஐபிஎல்லில் வீரர்கள் இணைவது குறித்த ECB இன் கவலைகளின் விளைவால், கட்டமைப்பில் ஐபிஎல் போன்ற தங்களது சொந்த ட்வென்டி20 போட்டித்தொடரை உருவாக்குவது என்னும் ஒரு தீவிரமான பதில்நடவடிக்கை முன்வைக்கப்பட்டது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் என்னும் இந்த லீக் தொடரில் 21 அணிகள் ஏழு அணிகள் கொண்ட மூன்று குழுக்களில் இடம்பெறும், இந்த தொடர் கோடை பருவத்தின் நிறைவுவாக்கில் நடத்தப் பெறும் என முன்மொழிவானது.[42] இந்த லீகின் வெளியீட்டிற்கு டெக்சாஸ் பில்லியனரான ஆலன் ஸ்டான்ஃபோர்டு உதவ இருப்பதாக ECB அறிவித்தது.[43] மேற்கு இந்திய தீவுகளில் வருடத்திற்கு இரண்டு முறை வெற்றிகரமாக நடைபெறும் ஒரு போட்டித் தொடரான ஸ்டான்ஃபோர்டு 20/20 தொடரின் மூளையாக இருந்தவர் தான் இந்த ஸ்டான்ஃபோர்டு. பிப்ரவரி 17, 2009 இல் ஸ்டான்ஃபோர்டுக்கு எதிராக மோசடி விசாரணை நடத்தப்படுவது குறித்த செய்திகள் பகிரங்கமாக வந்தவுடன், ஸ்பான்சர்ஷிப் விஷயத்தில் ஸ்டான்ஃபோர்டுடன் பேச்சு நடத்துவதில் இருந்து ECB மற்றும் WICB வாபஸ் வாங்கி விட்டன.[44][45] பிப்ரவரி 20 இல், ஸ்டான்ஃபோர்டுடனான தனது உறவுகளையும் முறித்துக் கொண்டு விட்டதாகவும் அவருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்து விட்டதாகவும் ECB அறிவித்தது.[46]
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் மோதல்கள் [தொகு]
மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பு நிலவரம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஸ்பான்ஷர்களுக்கு உலகளாவிய பாதுகாப்பு அளிப்பதான விருப்பம் ஆகிய விஷயங்களில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (CA) பிசிசிஐ மோதல்களை சந்தித்தது. தங்கள் ஸ்பான்சர்களுடன் நேரடி போட்டியாளர்களாக ஐபிஎல்லின் (மற்றும் அதன் அணிகளின்) ஸ்பான்சர்கள் இருப்பது ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சிக்கலுக்குள்ளாக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அஞ்சியது. இறுதியில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது,[47] அத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கு இந்திய சுற்றுப்பயணத்திற்கு முழுக்கவும் இருப்பதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான மோதல்கள் [தொகு]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புதுப்பிக்கப்பட்ட மத்திய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறாத (அல்லது புதிய ஒப்பந்தங்களை நிராகரிக்க தீர்மானித்த) பல வீரர்கள் போட்டி அமைப்பான இந்தியன் கிரிக்கெட் லீகில் (ஐசிஎல்) சேர முடிவெடுத்தனர். நவீத்-உல்-ஹாசன் மற்றும் முஸ்தாக் அகமது ஆகிய இத்தகைய இரண்டு வீரர்கள் இங்கிலாந்து கவுன்டிகளுடன் ஒப்பந்தங்கள் கொண்டிருந்தனர். இந்த வீரர்கள் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், அவர்கள் தங்களின் கவுன்டி அணிகளில் விளையாடுவதற்கு ஆட்சேபமின்மை சான்றிதழ்கள் வழங்காமலிருக்க முகாந்திரம் இல்லை என்கிற அடிப்படையில், அவர்களுக்கு ஆட்சேபமின்மை சான்றிதழ்கள் வழங்க பாகிஸ்தான் வாரியம் (பிசிபி) தீர்மானித்தது. ஆனால் இது ஐசிஎல் அமைப்பில் சேர்ந்த வீரர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிராக அமைந்ததால், பிசிசிஐக்கு இது உகந்ததாக அமையவில்லை. 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, தனது வீரர்கள் ஐபிஎல் விளையாட இந்தியாவிற்கு பயணம் செல்வது பாதுகாப்பற்றது என்று பாகிஸ்தான் அரசு கருதியது. ஆனால், ஐபிஎல் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்ட போது, தங்களையும் ஆட அனுமதிக்கும்படி பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் அமைப்பாளர்கள் மற்றும் லலித் மோடியிடம் கோரிக்கை வைத்தனர், ஆனால் அணிகள் ஏற்கனவே முடிவாகி விட்டதால், பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை என்று அவர்கள் கூறி விட்டனர். எப்படியாயினும், இரண்டாவது ஐசிசி உலகக்கோப்பை ட்வென்டி20 தொடரை பாகிஸ்தான் வென்றதையடுத்து, பல ஐபிஎல் உரிமையாளர்களும் தங்களது பாகிஸ்தான் வீரர்களை திரும்பவும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர்.
மற்ற வாரியங்களுடனான மோதல்கள் [தொகு]
மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் (WICB) மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (NZCB) போன்ற சிறு வாரியங்களும் தங்களது அணி வளர்ச்சியிலும் ஏற்கனவே அபாயநிலையில் இருக்கும் நிதி சூழ்நிலையிலும் ஐபிஎல் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளனர். சிறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவுக்கு ஊதியம் கிட்டுவதில்லை என்பதால், அவர்கள் ஐபிஎல்லில் சேர அதிகம் ஊக்கமுற்றவர்களாக உள்ளனர்.
ஊடக கட்டுப்பாடுகள் [தொகு]
ஆரம்பத்தில் பிரீமியர் லீக் ஆட்ட செய்திகளை சேகரிக்கும் ஊடகங்களுக்கு ஐபிஎல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது, ஊடக ஒளிபரப்பைப் பொறுத்தவரை இதே போன்ற விளையாட்டு லீக் தொடர்களில் வட அமெரிக்காவில் பின்பற்றப்படும் அதே மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதான விருப்பத்தில் விளைந்ததாக இது இருந்தது. நிகழ்வின் போது எடுக்கப்படும் படங்களை லைவ் கரண்ட் மீடியா இன்க் நிறுவனத்தின் (இந்த நிறுவனம் தான் இத்தகைய படங்களுக்கான உரிமைகளைப் பெற்றிருந்தது) கிரிக்கெட்.காம் மூலம் வாங்காமல் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு, மற்றும் கிரிக்கெட் அரங்கத்தில் இருந்து போட்டி குறித்த நேரலை ஒளிபரப்புக்கான தடை ஆகியவை குறிப்பிடத்தக்க நெறிமுறைகளில் அடக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது எடுக்கப்படும் அனைத்து படங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றுவதற்கும் ஊடக ஏஜென்சிக்கள் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. இது ஏற்றுக் கொள்ளத்தகாததாய் உலகெங்கிலுமான அச்சு ஊடகங்கள் கருதின. அவையனைத்தும் போட்டித் தொடரைப் புறக்கணிக்க போவதாக அச்சுறுத்தியதை அடுத்து, கட்டுப்பாடுகள் பலவற்றை ஐபிஎல் தளர்த்தியது.[48] அச்சு ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிக்களுக்கு முக்கிய சலுகைகள் அளிக்கும் திருத்தப்பட்ட வழிகாட்டல்கள் தொகுப்பினை ஏப்ரல் 15, 2008 இல் ஐபிஎல் வெளியிட்டது, இதனை இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டி ஏற்றுக் கொண்டது.[49]
இந்த திருத்தப்பட்ட கட்டுப்பாடுகள் வந்தும் கூட, கிரிக்கெட் சிறப்பு இணையதளங்களான கிரிக்இன்ஃபோ மற்றும் கிரிக்கெட்365 ஆகிய தளங்கள் அரங்கிலிருந்து நேரடி வர்ணனையளிப்பதற்கும் ஊடக ஏஜென்சிக்களிடம் இருந்து ஆட்ட படங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து தடை இருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 18 இல், ராய்டர்ஸ் மற்றும் AFP உள்ளிட்ட பல்வேறு பெரிய சர்வதேச ஏஜென்சிக்களும் ஐபிஎல்லை புறக்கணிப்பதான தங்கள் முடிவை அறிவித்தனர்.[50]
இந்திய கிரிக்கெட் கிளப்புடனான மோதல் [தொகு]
ஐபிஎல் விதிகளின் படி, முந்தைய போட்டித்தொடரின் வெற்றியாளர் தான் இறுதிப் போட்டிக்கான இடத்தை முடிவு செய்கிறார்.[51] 2009 ஆம் ஆண்டில், நடப்பு சாம்பியன்களாக இருந்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் மும்பை பிரபோன் ஸ்டேடியத்தை தேர்வு செய்தனர்.
ஆனால், பெவிலியன் பயன்பாடு தொடர்பான ஒரு மோதலில் அங்கு எந்த ஐபிஎல் போட்டிகளும் நடத்த முடியாத நிலை உருவானது. ஸ்டேடியத்திற்கு சொந்தக்காரர்களான இந்திய கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள் போட்டி நாட்களில் பெவிலியனுக்கு மொத்த உரிமைகளுக்கும் சொந்தக்காரர்களாய் உள்ளனர், ஆனால் ஐபிஎல்லோ தனது ஸ்பான்சர்களுக்கென பெவிலியனைக் கோரியது.[52] உறுப்பினர்களுக்கு அரங்கத்தில் இலவச இருக்கைகள் அளிக்கப்படுவதாக கூறப்பட்டது, ஆனால் உறுப்பினர்களை பெவிலியனில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கூறி கிளப் இதனை நிராகரித்து விட்டது.
குறிப்புதவிகள் [தொகு]
- ↑ Cricinfo Records - Indian Premier League - Most runs
- ↑ Cricinfo Records - Indian Premier League - Most wickets
- ↑ "BCCI asks players, officials to steer clear of ICL". June 25 2007. http://www.hindu.com/thehindu/holnus/007200706250324.htm. Retrieved 23 March 2010.
- ↑ "IPL matches to be broadcast live on Youtube". Cricinfo (January 20, 2010). பார்த்த நாள் 21 January 2010.
- ↑ "Indian Premier League brand value $4.13bn". Times of India (22 March 2010). பார்த்த நாள் 4 June 2009.
- ↑ "Indian Premier League". Edinburgh Middle East Report (EMER). http://www.emerglobal.com/sport/ipl. Retrieved 2010-03-25.
- ↑ IPL auction shuns Pakistan stars
- ↑ IPL auction gives prominence to Pakistan, Australia and South Africa
- ↑ 9.0 9.1 ">http://www.hindustantimes.com/cricketnews/Politics-trumps-sport-as-IPL-row-snowballs/500747/H1-Article1-500293.aspx Politics trumps sport as IPL row snowballs
- ↑ மிகப் பெரும் ஐபிஎல் ஏல வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர் - செய்திகள் - செய்திகள் - இந்தியாடைம்ஸ் கிரிக்கெட்
- ↑ கிரிக்இன்ஃபோ - பெரும் வர்த்தக மற்றும் பாலிவுட் தலைகள் ஐபிஎல்லில் இடம்பிடித்தனர்
- ↑ Pune and Kochi unveiled as new IPL franchises
- ↑ "IPL players' auction to be held on 20 February". Cricinfo.
- ↑ 14.0 14.1 "Sony and World Sports Group bag IPL television rights". Cricinfo. 2008-01-14. http://content-usa.cricinfo.com/ipl/content/current/story/330881.html. Retrieved 2008-04-12.
- ↑ "Billion dollar rights deal for IPL". The Australian. 2008-01-15. http://www.theaustralian.news.com.au/story/0,25197,23054747-2722,00.html. Retrieved 2008-04-12.
- ↑ IndranilBasu (2008-01-27). "Does the IPL model make sense?". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-2734443,prtpage-1.cms. Retrieved 2008-03-21.
- ↑ "Cricinfo - Australia to get live coverage of IPL". 2008-02-02. http://content-aus.cricinfo.com/ipl/content/current/story/335886.html. Retrieved 2008-04-12.
- ↑ ADD secures IPL telecast rights for Middle East and North Africa
- ↑ IPL: Willow TV gets TV rights for the Americas: Cricket Next
- ↑ Asian Television Network International Limited(2008-04-15). "THEY GAVE YOU NHL & NFL Now ATN Gives You IPL"(PDF). Press release. Retrieved on 2008-04-28.
- ↑ "Kushal Pal Singh". Forbes.com (03-11-09). பார்த்த நாள் 9 March 2010.
- ↑ "Kingfisher Airlines named IPL's umpire partner". The Economic Times. 20 March 2008. http://economictimes.indiatimes.com/News/News_By_Industry/Transportation/Airlines__Aviation/Kingfisher_Airlines_named_IPLs_umpire_partner/articleshow/2884409.cms. Retrieved 2009-05-08.
- ↑ "Five-year sponsorship agreements". The Globe and Mail (23-03-10). பார்த்த நாள் 23 March 2010.
- ↑ "Stiff clauses leave only 4 in race for IPL teams". The Economic Times. பார்த்த நாள் 9 March 2010.
- ↑ [1]
- ↑ IPL teams become hot commodity LiveMint article
- ↑ Lalit Modi ambition could create problems for IPL franchises
- ↑ IPL targets 80 licensing and merchandising deals this year
- ↑ DCI Mobile studios and; Sigma Ventures acquire global mobile Applications rights for IPL T20
- ↑ "All about the Indian Premier League (IPL)". NDTV (2009-02-05). பார்த்த நாள் 2009-08-13.
- ↑ Cricinfo, "Thrills, spills, yawns"
- ↑ http://www.india-server.com/news/about-24-million-watched-ipl-final-1605.html
- ↑ அனைவரின் கண்களும் ஏலத்தின் மீதிருக்க மெதுவான பரிவர்த்தனை, வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான ஐபிஎல் விதிகள் குறித்து சுருக்கமான விவாதம்.
- ↑ வீரர்கள் மாற்றத்திற்கான நெறிமுறைகளை ஐபிஎல் வகுக்கிறது, மாற்றத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்வது குறித்த ஐபிஎல் விதிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
- ↑ http://content-usa.cricinfo.com/india/content/story/374805.html, வீரர்கள் பரிவர்த்தனையின் போதான ஐபிஎல் விதிகள்.
- ↑ "Live Current Media Inc. and DLF Indian Premier League To Launch IPLT20.com as Official IPL Online Destination". livecurrent.com (18 April 2008).
- ↑ 37.0 37.1 91 கோடி ரூபாய் மீதான இந்தியா டுடே கட்டுரை
- ↑ கிரிக்கெட்டின் புதிய மன்னர்கள் பணத்தை குவிப்பார்களா?, 14 மே 2008
- ↑ OANDA.com வழங்கும்நாணய பரிவர்த்தனை விகிதம், நாணய தளம்
- ↑ 40.0 40.1 "ICC approval for IPL, no backing for ICL". IndiaTimes Cricket/PTI.
- ↑ "Dimitri Mascarenhas signs for Indian Premier League". Mirror.co.uk.
- ↑ "Lord's and The Oval may host IPL exhibition games". Cricinfo. 2008-03-29. http://content-usa.cricinfo.com/england/content/story/344424.html. Retrieved 2008-04-12.
- ↑ பிபிசி ஸ்போர்ட் | கிரிக்கெட் | இங்கிலாந்து | பெரும்பண ஆட்டத்தை ஏற்றுக் கொள்ள இசிபி தயார்
- ↑ "US tycoon charged over $8bn fraud". BBC News. February 17, 2009. http://news.bbc.co.uk/1/hi/world/americas/7895505.stm?lss.
- ↑ "Cricket: ECB suspend talks with Stanford over fraud accusation". AFP. February 17, 2009. http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gTCBAymO-w9rs6LyZqMnXcTl2hdw.
- ↑ ஆலன் ஸ்டான்ஃபோர்டுடன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறது, அசோசியேடட் பிரஸ், பிப்ரவரி 20, 2009
- ↑ "Cricket Australia under thumb". Fox Sports. 2008-02-10. http://www.foxsports.com.au/story/0,8659,23189909-23212,00.html. Retrieved 2008-04-12.
- ↑ "Modi climbs down on IPL media guidelines issue". The Hindu. 2008-04-13. http://www.hindu.com/2008/04/13/stories/2008041360150100.htm. Retrieved 2008-05-26.
- ↑ "IPL sorts out issues with media". The Times of India. 2008-04-15. http://ipl.timesofindia.indiatimes.com/IPL_sorts_out_issues_with_media/articleshow/2954338.cms. Retrieved 2008-05-26.
- ↑ "World news agencies to shun IPL due to curbs". 2008-04-18. http://afp.google.com/article/ALeqM5hyZhQPLagSrr820vmH0xSeykWASg.
- ↑ "Jaipur could lose its IPL matches". Cricinfo. 2009-02-16. http://content-usa.cricinfo.com/ipl2009/content/story/391001.html. Retrieved 2009-03-05.
- ↑ "Where should Mumbai Indians hold its IPL Matches?". Cricket 360. 2009-02-26. http://www.cricket360.com/1364-where-should-mumbai-indians-hold-its-ipl-matches.html. Retrieved 2009-03-05.
- ↑ "CCI members oppose restricted access proposal". Times of India. 2009-02-15. http://timesofindia.indiatimes.com/Mumbai/CCI_members_oppose_restricted_access_proposal/articleshow/4129961.cms. Retrieved 2009-03-05.
- ↑ "ATN gains Canadian broadcast rights of IPL". rsp. http://ipl2season.blogspot.com/2009/03/atn-gains-canadian-broadcast-rights-of.html.
புற இணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||