ஈடன் கார்டன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஈடன் கார்டன்ஸ் | ||||
ஈடன் கார்டன்ஸ் |
||||
| அரங்கத் தகவல்கள் | ||||
|---|---|---|---|---|
| அமைவிடம் | கொல்கத்தா | |||
| அமைப்பு | 1865 | |||
| இருக்கைகள் | 82,000 | |||
| முடிவுகளின் பெயர்கள் | உயர் நீதிமன்ற முனை பவிலியன் முனை |
|||
| பன்னாட்டுத் தகவல்கள் | ||||
| முதல் தேர்வு | 5 - 8 ஜனவரி 1934: இந்தியா எதிர் இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 14 - 18 பெப்ரவரி 2010: இந்தியா எதிர் தென்னாபிரிக்கா | |||
| முதல் ஒரு நாள் | 18 பெப்ரவரி 1987: இந்தியா எதிர் இலங்கை | |||
| கடைசி ஒருநாள் | 24 டிசம்பர் 2009: இந்தியா எதிர் இலங்கை | |||
|
23 டிசம்பர், 2010 இன் படி |
||||
ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, வங்காளம்: ইডেন গার্ডেন্স) என்பது இந்தியாவில் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம். வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது. அத்துடன் பன்னாட்டுத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இருக்கைகளின் எண்ணிக்கைகளைப் பொறுத்தளவில் இதுவே இந்தியாவின் மிகப் பெரிய துடுப்பாட்ட அரங்கமாகும்.
பொருளடக்கம் |
சாதனைகள் [தொகு]
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வீவீஎஸ் லட்சுமண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 281 ஆகும்.
- இம்மைதானத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் கவுதம் கம்பீர் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்ற 150 ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற 657/7d ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற 90 ஓட்ட்ங்கள் ஆகும்.
- இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஜவகல் ஸ்ரீநாத் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற 13/132 ஆகும்.
உலகக்கிண்ணம் [தொகு]
1987 உலகக் கிண்ணம் [தொகு]
| 23 அக்டோபர் 1987 துடுப்பாட்ட விபரம் |
சிம்பாப்வே 227/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 228/6 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
நியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி (14 பந்துகள் மீதமிருக்கையில்) நடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் விதானகமகே(இலங்) ஆட்ட நாயகன்: ஜெஃப் குரோ |
| அன்டி பைக்ரொஃப்ற் 52 ஆ.இ (46) ஸ்டீபன் புக் 2/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஜெஃப் குரோ 88 ஆ.இ (105) அலி ஷா 2/34 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
|||
1996 உலகக் கிண்ணம் [தொகு]2011 உலகக் கிண்ணம் [தொகு] |
||||