ஜி. வி. பிரகாஷ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜி. வி. பிரகாஷ் குமார்
பிறப்பு ஜூன் 13, 1987 (1987-06-13) (அகவை 27)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள் ஜி. வி. பி
பணி திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2006 முதல் தற்போது வரை

ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் அக்கா மகனும் ஆவார்.

எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜெண்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._பிரகாஷ்_குமார்&oldid=1747996" இருந்து மீள்விக்கப்பட்டது