ஆர். கே. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கே. சேகர்
இயற்பெயர்ராஜகோபால குலசேகரன்
பிறப்பு(1933-06-21)21 சூன் 1933
பிறப்பிடம்குடியாத்தம் வேலூர், மெட்ராஸ் மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு)
இறப்பு30 செப்டம்பர் 1976(1976-09-30) (அகவை 43)
இசை வடிவங்கள்திரைப்பட இசை, மேல்நாட்டுச் செந்நெறி இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், இசை நடத்துனர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்1964 – 1976

ராஜகோபால குலசேகரன் (R. K. Shekhar, 21 ஜூன் 1933 - 30 செப்டம்பர் 1976) மலையாள திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார் . இவர் 52 திரைப்படங்களில் 127 பாடல்களுக்கு (மலையாளத்தில் மட்டும் 23) இசையமைத்தார். மேலும் 100 இக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை நடத்துனராக இருந்தார். இவர் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் தந்தை ஆவார். [1] இவர் இசையமைத்த முதல் பாடல் "சோட்டா முதல் சுடலா வரே" ("தொட்டிலிலிருந்து கல்லறை வரை"), என்பதாகும். இப்பாடல் பழசி ராஜா (1964) திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்டு கேரளாவில் பெரிய வெற்றி பெற்றது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆர்.கே.சேகர் கஸ்தூரியை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் ஆந்திரப் பிரதேசம், திருப்பதியில் அமைந்துள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. சேகர் மற்றும் கஸ்தூரிக்கு ஏ. ஆர். ரைஹானா, ஏ. ஆர். ரகுமான், பாத்திமா ரபீக் மற்றும் இஷ்ரத்கத்ரே ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[2] சேகர் 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி அன்று தனது 43 வது வயதில் இறந்தார். ஜி. வி. பிரகாஷ் குமார் இவரது பேரன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "His father's son: How AR Rahman's father RK Shekhar made his mark as a composer and arranger". Scoll.in.
  2. https://www.facebook.com/isshrathquadhre
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._சேகர்&oldid=3419068" இலிருந்து மீள்விக்கப்பட்டது