மேல்நாட்டுச் செந்நெறி இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல்நாட்டுச் செந்நெறி இசை (Classical music) என்பது மேல்நாட்டு, மதம் சார்ந்ததும், மதச் சார்பற்றதுமான மரபுகளின் அடிப்படையில் அமைந்த இசையைக் குறிக்கும். இது கிபி 9ஆம் நூற்றாண்டு தொடக்கம் இன்று வரையான நீண்ட காலப் பகுதியில் பயிலப்பட்டு வருகிறது. இம் மரபின் விதிகள் தொகுக்கப்பட்டது 1550 தொடக்கம் 1900 ஆண்டு வரையிலான காலப்பகுதியிலாகும். ஐரோப்பிய இசையல்லாத பிற இசை மரபுகளிலிருந்து ஐரோப்பிய இசை மரபு வேறுபடும் முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் குறியீட்டு முறை ஆகும். இக் குறியீட்டு முறை 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. மேற்கத்திய இசைக் குறியீடு, இசையமைப்பாளர்கள் சுருதி, நடை முதலான அம்சங்களை இசைக் கலைஞர்களுக்குக் குறுத்துக் கொடுப்பதற்கு உதவுகிறது. இது, ஐரோப்பிய மரபுசாராத இசை முறைகளில் உள்ளதுபோல், சமயத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்வதற்கும், வேறு அலங்காரங்களுக்கும் இடமளிப்பதில்லை. இதனை ஐரோப்பிய இசையை, இந்தியச் செந்நெறி இசை மரபுகளுடனும், ஜப்பானிய மரபு இசைகளுடனும் ஒப்பிடுவதன் மூலம் அறிய முடியும்.

1900களில் இவ்வகை இசை தொடர்பாக மக்களின் ஆர்வம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் குறையத் தொடங்கியது. இக் காலப்பகுதியில் செந்நெறி இசை, வணிக அடிப்படையில் பெரும் வெற்றிகளைப் பெற்ற மக்கள் இசையுடன் ஒப்பிடும்போது பின்தங்கியே இருந்தது.


மேலும் காண்க[தொகு]