பாபநாசம் சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போளகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமைய்யா என அழைத்தனர். பாபநாசம் சிவன் என்னும் பெயரானது இவருக்கு தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் இட்ட பெயர். 1912 இல் பாபநாசம் சிவன் அதிகாலையில் சிவன் கோயிலின் முன் நின்று அரும் பொன்னே மணியே என்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இரங்கிவந்ததாகப் போற்றி புகழ்ந்ததின் காரணமாக இப்பெயர் பெற்றார்.

புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்களை தங்கள் இசை நிகழ்ச்சிகளில் (கச்சேரிகளில்) பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன். அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் முதலான புகழ்பெற்ற பாடகர்கள் அனைவரும் பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடியுள்ளனர். பாபநாசம் சிவன் கிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களிலும் இயற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.

பாபநாசம் சிவன் 10 ஆண்டுகள் உழைத்து 1952ல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார். இவருடைய கடைசி ஆக்கங்களாக இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலையும், அதே போல காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் நூலையும் கூறுவர்.

இயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்[தொகு]

  • கருணாகரனே...சிவசங்கரானே...!
  • குருவாயூரப்பா...குழந்தாய்... முகுந்தா...
  • ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ?...
  • கற்பகமே கண் பாராயும்...
  • கணபதே, மகாமதே...

திரைப்படங்களில்[தொகு]

சீதா கல்யாணம் (1933) திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். பக்த குசேலா படத்தில் பாடி நடித்துள்ளார்.

திரைப்படத்திற்காக இயற்றிய பாடல்கள்:

  • மன்மதலீலையை வென்றார் உண்டோ...
  • ராதே உனக்கு கோபம்... (சிந்தாமணி 1937 )
  • அம்பா மனங்கனிந்து... (சிவகவி 1943 )

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாபநாசம்_சிவன்&oldid=1378306" இருந்து மீள்விக்கப்பட்டது