எம். எஸ். கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எம். எஸ். கோபாலகிருஷ்ணன் , (M. S. Gopalakrishnan, பரவலாக MSG, சூன் 10,1931 - சனவரி 3, 2013), கருநாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது[1] வழங்கியுள்ளது.

வாழ்க்கையும் பணிவாழ்வும்[தொகு]

சென்னை, மைலாப்பூரில் சூன் 10,1931 அன்று பிறந்தவர் கோபாலகிருஷ்ணன். கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசையை தமது தந்தையார் பேராசிரியர். பரூர் சுந்தரம் அய்யரிடம் பயின்றார். இவர் தந்தை 1910-ல் வட இந்தியாவில் வயலினை அறிமுகம் செய்தவர். கோபாலகிருஷ்ணன் தனது 8 வது அகவையிலேயே இசை கச்சேரிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர்,ஆலத்தூர் சகோதரர்கள், பல்லடம் சஞ்சீவ ராவ் என அந்தக் காலத்தின் முன்னணிப் பாடகர்கள் பலருக்கும் வயலின் வாசித்துள்ளார். இசைக்கச்சேரிகளில் பக்க வாத்தியமாக இல்லாது தனி வயலின் கச்சேரியாக கடந்த ஐம்பதாண்டுகளாக நடத்தியுள்ளார். ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு இசைப்பயணம் சென்றுள்ளார்.

இவரது மகளான முனைவர் எம். நர்மதா ஓர் சிறந்த வயலின் இசைக்கலைஞராக விளங்குகிறார்.

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது

  • 1960 வயலின் வாத்திய சாம்ராட் - மும்பை சிவானந்த ஆசிரமம், இந்தியா
  • 1975 பத்மசிறீ - இந்திய அரசு
  • 1976 வயலின் வாத்தியச் சக்கரவர்த்தி - நியூயார்க், அமெரிக்கா
  • 1978 கலைமாமணி - தமிழக அரசு, இந்தியா
  • 1979 கேரள சங்கீத நாடக அகாதமி விருது, இந்தியா
  • 1980 டி.சௌடைய்யா விருது - கர்நாடகம், இந்தியா
  • 1982 சங்கீத நாடக அகாதமி விருது[2]
  • 1997 சப்தகிரி சங்கீத வித்வமணி - திருப்பதி தேவத்தானம், இந்தியா
  • 1998 சங்கீத கலாநிதி - மியூசிக் அகாதமி சென்னை, இந்தியா
  • 2012 பத்ம பூசன் - இந்திய அரசு
  • 2012 சங்கீத கலாசிகாமணி விருது - இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

மறைவு[தொகு]

சனவரி 3 - 2013 அன்று, இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் தனது 82ஆவது வயதில் கோபாலகிருஷ்ணன் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ தினமணி, சனவரி 26,2012
  2. SNA Awardeeslist
  3. "Violin maestro M.S. Gopalakrishnan dies at 82". The Hindu (2013-01-03). பார்த்த நாள் 2013-01-03.

உசாத்துணை[தொகு]

'வேலைக்குப் போகாதே' கட்டுரை, எழுதியவர்:ரிஷிகேஷ்; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)