நெ. து. சுந்தரவடிவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெ. து. சுந்தரவடிவேலு

பிறப்பு நெ. து. சுந்தரவடிவேலு
அக்டோபர் 12, 1911(1911-10-12)
நெய்யாடுபாக்கம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஏப்ரல் 12, 1993 (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் கல்வியாளர், தமிழ்ப் பேச்சாளர், எழுத்தாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1911-1993
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
பத்மஸ்ரீ தேசிய விருது
1961 சிறந்த கல்வியாளர்

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1911 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[1] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [2] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.

பொதுக்கல்வி இயக்குனர்[தொகு]

1951 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

இலவச மதிய உணவுத் திட்டம்[தொகு]

இவர் காலத்தில்தான் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறிற்று. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் வயிறாரச் சாப்பிட்டது மட்டுமில்லாமல் இலவசக் கல்வியும் கற்றனர்.

ஓராசிரியர் பள்ளிகள்[தொகு]

எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

முதல் பொது நூலக இயக்குனர்[தொகு]

சுந்தரவடிவேலு, 1951 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார். அப்போது நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார்[3]. பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கிடைத்ததும் இவர் காலத்தில்தான். தமிழ் நாட்டில் சொத்து வரியுடன் சேர்த்து பெறப்படுகிற நூலக வரி திட்டம் இவர் பொது நூலக இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்[தொகு]

சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்[4].

தமிழ் எழுத்தாளர்[தொகு]

சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்[5].

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

 1. எண்ண அலைகள். முருகன் & கம்பெனி.
 2. நான் கண்ட சோவியத் ஒன்றியம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
 3. சோவியத் மக்களோடு. வானதி பதிப்பகம் 1973
 4. வள்ளுவர் வாய்மொழி. வானதி பதிப்பகம். 1973
 5. நஞ்சு உண்டவர். கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம். 1979
 6. நினைவில் நிற்பவைகள். வானதி பதிப்பகம். 1982
 7. நினைவு அலைகள் 1,2,3. வானதி பதிப்பகம் 1983
 8. லெனின் வாழ்கிறார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009
 9. பெரியாரும் சமதர்மமும்.
 10. சிங்காரவேலரும் பகுத்தறிவும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 11. புதிய ஜெர்மனியில். வானதி பதிப்பகம்
 12. சாக்ரடீஸ்.
 13. வள்ளுவன் வரிசை 1-13 நூல்கள் முருகன் அண்ட் கம்பெனி, 1959.
 14. அடித்தா? அணைத்தா?, நெ.து. சுந்தரவடிவேலு வெளியீடு , 1958; இலவசப் பதிப்பு.
 15. பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள யோசனைகள், தாமரை 1992,
 16. தியாகச் செம்மல் நால்வர், தாமரை,1992,
 17. மேதை மேகநாதன், வானதி பதிப்பகம், 1973
 18. சோவியத் மக்களோடு, வானதி பதிப்பகம்
 19. பிரிட்டனில், வானதி பதிப்பகம், 1975
 20. வாழ்விக்க வந்த பாரதி, வானதி பதிப்பகம்
 21. ஊருக்கு நல்லது, சுந்தரவடிவேலு, வானதி பதிப்பகம்
 22. உதிரிப்பூ, கலைக்கதிர் வெளியீடு, கோவை; 1959
 23. பூவும் கனியும், கலைக்கதிர் வெளியீடு, கோவை
 24. சிந்தனை மலர்கள், கலைக்கதிர் வெளியீடு, கோவை
 25. அங்கும் இங்கும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 26. எல்லோரும் வாழ்வோம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 27. இலக்கியம் கொழிக்கும் சோவியத் ஒன்றியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 28. சோவியத் கல்விமுறை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
 29. பயன்மிகு பத்தாண்டுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
 30. புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்ட் கோ, சென்னை;
 31. பெரியாரும் சமதர்மமும், புதுவாழ்வு பதிப்பகம்,
 32. இந்திய சோவியத் தோழமை, இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம், சென்னை;
 33. சுதந்திரம் காப்போம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை;
 34. உலகத் தமிழ், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை;
 35. கல்வி வள்ளல் காமராசர், எமரால்ட் பப்ளிகேஷன்ஸ்,‌ சென்னை;
 36. முதியோர் கல்வி முதல்நூல்; முதியோர் கல்வி இயக்ககம், சென்னை; மு
 37. எல்லோரும் படிப்போம், தாகூர் கல்வி நிலையம்;
 38. தலைவருள் மாணிக்கம், தமிழ் நூல்நிலையம், சென்னை;
 39. வையம் வாழ்க,
 40. துலா முழுக்கு,
 41. சுந்தர வடிவேலனாரின் மந்திர மணி மொழிகள்: ஆண்டு விழா 20-1-1961. அரசினர் ஆதாரப் பயிற்சிப் பள்ளி மாணவ-ஆசிரியர் சங்கம். 1961

சிறப்புகள்[தொகு]

 • இந்திய குடியரசு 1961 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ[6] விருது வழங்கியது.[2].
 • சுந்தரவடிவேலு நினைவாக உத்தரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நெ. து. சுந்தரவடிவேலு அரசு உயர்நிலைப் பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெ._து._சுந்தரவடிவேலு&oldid=1705373" இருந்து மீள்விக்கப்பட்டது