என். ரமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். ரமணி (பி. 1934) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
தமிழ்நாடு திருவாரூரில் பிறந்த இவர், தனது தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம்[1] புல்லாங்குழல் இசையைக் கற்கத் தொடங்கினார். தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்திடம் மாணவராக இசை பயின்றார்.
தொழில் வாழ்க்கை [தொகு]
அனைத்திந்திய வானொலியில் இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், மற்ற இசைக் கலைஞர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
விருதுகள் [தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 1996; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1998
- பத்மஸ்ரீ விருது; வழங்கியது: இந்திய அரசாங்கம்
- சங்கீத ஆச்சார்யா விருது; வழங்கியது: வாசேர் கல்லூரி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- மதிப்புறு குடியுரிமை நிலை; வழங்கியுள்ளது: மேரிலன்ட், ஒகையோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- மதிப்புறு முனைவர் பட்டம் (கலை); வழங்கியது: உலக பல்கலைக்கழகம், அரிசோனா[1]