மல்லிகா சாராபாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மல்லிகா சாராபாய் | |
|---|---|
| பிறப்பு | மே 9, 1954 அகமதாபாத், குஜராத் |
| பணி | குச்சிப்பிடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1969 - நடப்பு |
| உயரம் | 5' 6" |
| பிள்ளைகள் | ரெவாண்ட்டா மற்றும் அனாஹித்தாa |
| இணையதளம் | |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | |
மல்லிகா சாராபாய் (பி.மே 9, 1954) ஒரு இந்திய சமூக ஆர்வலர் மற்றும் பிரபல நடனக் கலைஞர். இவர் மறைந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாய் மற்றும் பிரபல நடனக் கலைஞர் மிருனாளினி தம்பதியினரின் மகளாவார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியை எதிர்த்து போட்டியிட்டார். இதனால் நாடுமுழுவதும் பிரபலம் அடைந்த மல்லிகா சாராபாய் அந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை.