ரேச்சேல் கார்சன்
| ராச்சல் கார்சன் | |
|---|---|
ராச்சல் கார்சன், 1940 ஐக்கிய அமெரிக்காவின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவை அதிகாரியாக ஒளிப்படம் |
|
| பிறப்பு | ராச்சல் லூயி கார்சன் மே 27, 1907 இசுபிரிங்டேல், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | ஏப்ரல் 14 1964 (அகவை 56) சில்வர் இசுபிரிங், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா |
| தொழில் | கடல்சார் உயிரியலாளர், எழுத்தாளர் |
| நாடு | அமெரிக்கர் |
| எழுதிய காலம் | 1937–1964 |
| இலக்கிய வகை | இயற்கை எழுத்தாளர் |
| கருப்பொருட்கள் | கடல்சார் உயிரியல், சூழ்நிலையியல், பூச்சிக்கொல்லிகள் |
| குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
சைலண்ட் இசுபிரிங் (Silent Spring) |
ராச்சல் லூயி கார்சன் ( Rachel Louise Carson) (மே 27, 1907 – ஏப்ரல் 14, 1964) ஓர் அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவிய இயற்கை குறித்த எழுத்தாளர்.
கார்சன் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவையில் உயிரியலாளராக தமது பணிவாழ்வைத் தொடங்கினார். 1950களில் முழுநேர இயற்கை எழுத்தாளராக மாறினார். 1951ஆம் ஆண்டு வெளியான அவரது புத்தகம் த சீ அரௌண்ட் அஸ் (The Sea Around Us)-நம்மைச் சுற்றியுள்ள கடல், அவருக்கு புகழையும் பணத்தையும் பெற்றுத் தந்தது. பிறவி எழுத்தாளராக காணப்பட்ட அவரது அடுத்த நூல், அண்டர் த சீவின்ட் - கடற்காற்றின் கீழேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல்கள் கடல்வாழ் உயிரினங்கள்,கடற்கரையிலிருந்து மேற்கடல்,ஆழ்கடல் வரை, பற்றிய தகவல்களை ஆராய்ந்தது.
1950களில் கார்சன் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தீந்தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தலானார். இதன் அடிப்படையில் அவர் எழுதிய சைலண்ட் இசுபிரிங் - மௌன வசந்தம் என்ற நூல் அமெரிக்கர்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் தேசிய பூச்சிக்கொல்லிகள் குறித்த கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு டி.டி.டீயும் பிற பூச்சிக்கொல்லிகளும் தடை செய்யப்பட்டன. மேலும் இந்நூலின் தாக்கத்தால் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஏற்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்டர் விடுதலைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை மறைவிற்குப் பிறகு அவருக்கு வழங்கினார்.
படைப்புகளின் பட்டியல்[தொகு]
- Under the Sea Wind, 1941, Simon & Schuster, Penguin Group, 1996, ISBN 0-14-025380-7
- "Fishes of the Middle West" (PDF). United States Government Printing Office (1943).
- "Fish and Shellfish of the Middle Atlantic Coast" (PDF). United States Government Printing Office (1945).
- "Chincoteague: A National Wildlife Refuge" (PDF). United States Government Printing Office (1947).
- "Mattamuskeet: A National Wildlife Refuge" (PDF). United States Government Printing Office (1947).
- "Parker River: A National Wildlife Refuge" (PDF). United States Government Printing Office (1947).
- "Bear River: A National Wildlife Refuge" (PDF). United States Government Printing Office (1950). (with Vanez T. Wilson)
- The Sea Around Us, 1951, Oxford University Press, 1991, ISBN 0-19-506997-8
- The Edge of the Sea, 1955, Mariner Books, 1998, ISBN 0-395-92496-0
- Silent Spring, Houghton Mifflin, 1962, Mariner Books, 2002, ISBN 0-618-24906-0
- Silent Spring initially appeared serialized in three parts in the June 16, June 23, and June 30, 1962 issues of The New Yorker magazine
- The Sense of Wonder, 1965, HarperCollins, 1998: ISBN 0-06-757520-X published posthumously
- Always, Rachel: The Letters of Rachel Carson and Dorothy Freeman 1952–1964 An Intimate Portrait of a Remarkable Friendship, Beacon Press, 1995, ISBN 0-8070-7010-6 edited by Martha Freeman (granddaughter of Dorothy Freeman)
- Lost Woods: The Discovered Writing of Rachel Carson, Beacon Press, 1998, ISBN 0-8070-8547-2
- Bedrock: Writers on the Wonders of Geology, edited by Lauret E. Savoy, Eldridge M. Moores, and Judith E. Moores, Trinity University Press, 2006, ISBN 1-59534-022-X
வெளியிணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Rachel Carson தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Rachel Carson papers – Yale University Library finding aid for Carson's papers
- New York Times obituary
- RachelCarson.org—website by Carson biographer Linda Lear
- Time, Mar. 29, 1999, Environmentalist RACHEL CARSON