ஜேம்ஸ் குக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேம்ஸ் குக் | |
|---|---|
| பிறப்பு | 7 நவம்பர் [யூ.நா. 27 அக்டோபர்] 1728 மார்ட்டன், யோர்க்சயர், இங்கிலாந்து, பெரிய பிரித்தானியா |
| இறப்பு | பெப்ரவரி 14 1779 (அகவை 50) ஹவாய் |
| தேசியம் | |
| பணி | நாடுகாண் பயணி |
| பட்டம் | கப்டன் |
| பெற்றோர் | ஜேம்ஸ் குக், கிரேஸ் பேஸ் |
| வாழ்க்கைத் துணை | எலிசபெத் பாட்ஸ் |
| பிள்ளைகள் | ஜேம்ஸ், நத்தானியல், எலிசபெத், ஜோசப், ஜோர்ஜ், ஹியூ |
| கையொப்பம் | |
ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி. நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலகப்படத்தில் குறித்ததுடன் பசுபிக் சமுத்திரத்தில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். தனது முதற்பயணத்தின் போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார்.மூன்றாவது பசுபிக் பயணத்தின்போது ஹவாய்த்தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார்.