3 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 3 | |
|---|---|
| முதலெண் | 3 மூன்று |
| வரிசை | 3ஆவது மூன்றாவது |
| எண்ணுரு | முந்நிலை எண் முறைமை |
| காரணியாக்கல் | முதன்மை |
| காரணிகள் | 1, 3 |
| ரோம எண்ணுரு | III |
| உரோம எண் (ஒருங்குறி) | Ⅲ, ⅲ |
| கிரேக்க எண் | γ அல்லது Γ |
| அரபு | ٣,3 |
| வங்காளம் | ৩ |
| சீன எண் | 三,弎,叁 |
| தேவநாகரி | ३ |
| சப்பானிய எண் | 三 |
| தெலுங்கு | ౩ |
| மலையாளம் | ൩ |
| தமிழ் | ௩ |
| எபிரேயம் | ג |
| கெமர் | ៣ |
| தாய் | ๓ |
| துவித எண் முறைமை | 11 |
| எண்ம எண் முறைமை | 3 |
| பதினறும எண் முறைமை | 3 |
மூன்று (ஆங்கிலம்: Three) என்பது தமிழ் எண்களில் ௩ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] மூன்று என்பது இரண்டிற்கும் நான்கிற்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
பொருளடக்கம் |
காரணிகள் [தொகு]
மூன்றின் நேர்க் காரணிகள் 1, 3 என்பனவாகும்.[2]
இயல்புகள் [தொகு]
- மூன்று ஓர் ஒற்றை எண்ணாகும்.
- மூன்றானது இரண்டாவது முக்கோண எண்ணாகும்.
- மூன்றை மூன்று வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- மூன்றானது நான்காவது ஃபிபொனாச்சி எண் ஆகும்.
- மூன்றானது இரண்டாவது லூகாஸ் எண்ணாகும்.
- மூன்று ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில்,
என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும். - நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சமபக்க முக்கோணியை உருவாக்கலாம்.[3]
மூன்றின் பெருமை [தொகு]
வேதம் மூன்று - இருக்கு,யசூர்,சாமம்
மூன்று மூர்த்திகள் - பிரம்மா,விஸ்ணு,சிவன்
தொழில்கள் மூன்று - படைத்தல்,காத்தல்,அழித்தல்
உலகம் மூன்று - பூதலம்,மீதலம்,பாதலம்
கடவுளின் நிலை மூன்று - அருவம்,உருவம்,அருவுருவம்
காலம் மூன்று - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
ஆசைகள் மூன்று - மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை
குணங்கள் மூன்று - சத்துவம்,ராயசம்,தாமதம்
தமிழ் மூன்று - இயல்,இசை,நாடகம்
கனிகள் மூன்று - மா,பலா,வாழை

என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.