100 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 100 | |
|---|---|
|
|
|
| முதலெண் | 100 நூறு |
| வரிசை | 100ஆவது நூறாவது |
| எண்ணுரு | |
| காரணியாக்கல் | ![]() |
| காரணிகள் | 1, 2, 5, 10, 20, 25, 50, 100 |
| ரோம எண்ணுரு | C |
| உரோம எண் (ஒருங்குறி) | C, ⅽ |
| கிரேக்க எண் | ρʹ |
| அரபு | ١٠٠ |
| வங்காளம் | ১০০ |
| சீன எண் | 佰,百 |
| தேவநாகரி | १०० |
| தமிழ் | ௱, ௧௦௦ |
| தாய் | ร้อย, ๑๐๐ |
| துவித எண் முறைமை | 1100100 |
| எண்ம எண் முறைமை | 144 |
| பதினறும எண் முறைமை | 64 |
100 (நூறு) (ஆங்கிலம்: One Hundred) என்பது தமிழ் எண்களில் ௱ அல்லது ௧௦௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நூறு என்பது தொன்னூற்று ஒன்பதுக்கும் நூற்று ஒன்றுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
பொருளடக்கம் |
கணிதவியல் [தொகு]
காரணிகள் [தொகு]
- நூறின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10, 20, 25, 50, 100 என்பனவாகும்.
சிறப்புகள் [தொகு]
- விழுக்காடு கணிப்பதற்கு நூறு எண்ணே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது
- முதல் ஒன்பது பகா எண்களின் கூட்டுத்தொகை நூறு ஆகும்
- நான்கு இணை (சோடி) பகா எண்களின் கூட்டுத்கொகை (47 + 53, 17 + 83, 3 + 97, 41 + 59)
- முதல் நான்கு எண்களின் மூன்றடுக்கு கூட்டுத்தொகை நூறு (100 = 13 + 23 + 33 + 43)
- அதுமட்டுமின்றி, 26 + 62 = 100, அதனால் 100 என்பது ஒரு லேலண்டு எண் ஆகும்.
- நூறு 18- கோண எண்ணாகும்
- நூறு ஒரு ஹசார்டு எண் ஆகும்
- மிகச்சரியாக 100 பகா எண்களின் இலக்கங்கள் ஏறு வரிசையில் அமைந்த்துள்ளது (எ. கா. 239, 2357 மற்றும் பல)
அறிவியல் [தொகு]
- 100 என்பது பெர்மியத்தின் அணுவெண் ஆகும்.
- செல்சியஸ் அளவுகோளில் 100 என்பது, நீரின் கொதிநிலையைக் குறிக்கும்.
அரசியல் [தொகு]
- ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மிகச்சரியாக நூறு உறுப்பினர்கள் உள்ளனர்.
- இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பதினை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
பணம் [தொகு]
- பெரும்பாலான நாடுகளில் 100-என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு நாணயம் மற்றும் பண மதிப்பீடு செய்யப்படுகிறது.
எ.கா. 100 பைசா = 1 ரூபாய்
பொழுதுபோக்கு [தொகு]
- ஒரு திரைப்படம் அல்லது மேடை நாடகம் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக நடந்தால், அத்திரைப்படம் அல்லது மேடை நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விளையாட்டு [தொகு]
- பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 என்ற எண் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- 100 மீற்றர் ஓட்டப் பந்தயம் என்பதில் துவங்கி பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 அல்லது அதனுடைய அடுக்கை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்களின் இலக்கின் தூரம் நிர்ணயிக்கப்படுகின்றன.
- துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர்.
பிற துறைகள் [தொகு]
- வரலாற்றில் ஆண்டுகள் 100 அடிப்படையில் நூற்றாண்டுகளாகக் கணக்கிடப்படுகின்றன. நூற்றாண்டில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை 100
- இந்தியா, இசுரேல், நேபாளம் மற்றும் கிரீசு நாடுகளில் 100 என்பது காவல்துறையினரின் தொலைபேசி எண்
- பெல்ஜியத்தில், 100 என்பது தீயணைப்பு மற்றும் நோயாளர் ஊர்தியை (ஆம்புலன்சு) தொடர்பு கொள்ள பயன்படும் தொலைபேசி எண்ணாகும்
- ஐக்கிய ராச்சிய நாடுகளில், 100 என்பது தொலைபேசி இணைப்பகத்தின் எண்
- 100 என்பது மீயுரை பரிமாற்ற நெறிமுறையில் வாடிக்கையாளர் தன்னுடைய கோரிக்கையினை தொடர வேண்டும் என்பதற்கான அறிவிப்பு
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 100 (எண்) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- On the Number 100 (ஆங்கிலத்தில்)
