கிரேக்கம் (மொழி)
| கிரேக்கம் (எல்லினிக்கா) Ελληνικά Εlliniká |
||
|---|---|---|
| நாடுகள்: | கிரீசு,சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா, மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, அர்மேனியா, ஜியார்ஜியா,உக்ரைன்,மால்டோவா, ருமேனியா,உருசியா, எகிப்து, ஜோர்டான், தென் ஆப்பிரிக்கா, கசக்ஸ்த்தான், பிரான்ஸ், புலம்பெயர் கிரேக்கர் |
|
| பேசுபவர்கள்: | 15 மில்லியன்[1] | |
| நிலை: | 52 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய முதுமுதல் கிரேக்கம் கிரேக்கம் (எல்லினிக்கா) |
|
| எழுத்து முறை: | கிரேக்க அகரவரிசை | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | சிறுபான்மை மொழியாக அறியப்பட்ட நாடுகள்: |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | el | |
| ISO 639-2: | gre (B) | ell (T) |
| ISO/FDIS 639-3: | either: grc — பழைய கிரேக்கம் ell — தற்கால கிரேக்கம் |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (ελληνική γλώσσα IPA: [eliniˈci ˈɣlosa] அல்லது சுருக்கமாகελληνικά IPA: [eliniˈka] — "எல்லினிக்கா", "Hellenic") ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலேயே யாதொரு மொழியினும் மிகநெடிய வரலாறு கொண்ட மொழியாகும். இந்திய ஐரோப்பிய மொழிகளுள் இதுவே எழுத்து வடிவிலும் (மைசீனிய கிரேக்கம் மொழி), சிறு குறிப்புகளாக இருப்பினும், வரலாற்றில் முன்மையான பதிவு கொண்ட மொழி ஆகும். இப்பதிவுகள் கி.மு 15 ஆவது 14ஆவது நூற்றாண்டுகளைச் சேரும். இதனுடன் வரலாற்றில் போட்டியிடக்கூடிய மொழிகள் இன்று இறந்துபட்ட மொழிகளாகிய அனட்டோலியன், மற்றும் சமசுகிருதத்திற்கு மூலமாகிய வேதமொழி ஆகும். இன்று கிரேக்க மொழியை 15-25 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். கிரேக்க மொழியானது கிரீசு, சைப்பிரசு, அல்பேனியா, பல்கேரியா, மாசிடோனியா, இத்தாலி, துருக்கி, அர்மேனியா, ஜியார்ஜியா,உக்ரைன்,மால்டோவா,ருமேனியா,உருசியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இது தவிர கிரேக்க மொழியை உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்த கிரேக்க மொழியாளர்களும் அன்றாடம் பயன்படுத்துகின்றனர் (குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்).
பொருளடக்கம் |
கிரேக்க இலக்கியம் [தொகு]
கிமு 800 [தொகு]
கிமு 400 [தொகு]
- The Dialogues of Plato: The Republic (Plato)
- Corpus Aristotelicum
- Epicureanism
- Stoicism
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. பார்த்த நாள் 2007-02-18.