1 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 1 | |
|---|---|
| முதலெண் | 1 ஒன்று |
| வரிசை | 1ஆவது முதலாவது |
| எண்ணுரு | ஒரும எண் முறைமை |
| காரணியாக்கல் | ![]() |
| காரணிகள் | 1 |
| கிரேக்க எண் | α' |
| ரோம எண்ணுரு | I |
| உரோம எண் ([ஒருங்குறி]) | Ⅰ, ⅰ |
| பாரசீகம் | ١ - یک |
| அரபு | ١ |
| வங்காளம் | ১ |
| சீன எண் | 一,弌,壹 |
| கொரிய எண் | 일, 하나 |
| தேவநாகரி | १ |
| தெலுங்கு | ೧ |
| தமிழ் | ௧ |
| கன்னடம் | ೧ |
| எபிரேயம் | א |
| கெமர் | ១ |
| தாய் | ๑ |
| துவித எண் முறைமை | 1 |
| எண்ம எண் முறைமை | 1 |
| பதினறும எண் முறைமை | 1 |
ஒன்று (1) என்பது தமிழ் எண்களில் முதல் எண் 'க'வைக் குறிக்கும் சொல். இது ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.
ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.[1]
காரணி [தொகு]
ஒன்றின் நேர்க் காரணி 1 ஆகும்.[2]
இயல்புகள் [தொகு]
- எந்த ஓர் எண்ணையும் ஒன்றால் பெருக்குவதால் பெறப்படும் விடையானது அவ்வெண்ணுக்குச் சமனாக இருக்கும்.[3]
- ஒன்றானது முதலாவது முக்கோண எண்ணாகும்.[4]
- ஒன்றானது முதலாவது சதுர எண்ணாகும்.[5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004.
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கிலத்தில்)
- ↑ ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கிலத்தில்)
- ↑ முக்கோண எண் (ஆங்கிலத்தில்)
- ↑ வர்க்கங்கள் (ஆங்கிலத்தில்)
