5 (எண்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 5 | |
|---|---|
| முதலெண் | 5 ஐந்து |
| வரிசை | 5ஆவது ஐந்தாவது |
| காரணியாக்கல் | முதன்மை |
| காரணிகள் | 1, 5 |
| ரோம எண்ணுரு | V |
| உரோம எண் (ஒருங்குறி) | Ⅴ, ⅴ |
| கிரேக்க எண் | ε அல்லது Ε |
| அரபு | ٥,5 |
| வங்காளம் | ৫ |
| பஞ்சாபி | ੫ |
| சீன எண் | 五,伍 |
| தேவநாகரி | ५ |
| எபிரேயம் | ה |
| கெமர் | ៥ |
| தெலுங்கு | ౫ |
| மலையாளம் | ൫ |
| தமிழ் | ௫ |
| தாய் | ๕ |
| துவித எண் முறைமை | 101 |
| எண்ம எண் முறைமை | 5 |
| பதினறும எண் முறைமை | 5 |
ஐந்து (ஆங்கிலம்: Five) என்பது தமிழ் எண்களில் ௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள் [தொகு]
ஐந்தின் நேர்க் காரணிகள் 1, 5 என்பனவாகும்.[2]
இயல்புகள் [தொகு]
- ஐந்து ஓர் ஒற்றை எண்ணாகும்.
- ஐந்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- ஐந்தானது ஐந்தாவது ஃபிபொனாச்சி எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது கேடலான் எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும்.
- ஐந்தானது நான்காவது ஆய்லர் எண்ணாகும்.
- ஐந்து ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில்,
என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும். - ஐந்து ஒரு வில்சன் முதன்மை எண்ணாகும். ஏனெனில்
ஆனது
ஐப் பிரிக்கக்கூடியது. - நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான ஐங்கோணியை உருவாக்கலாம்.
- பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும்.
[3]

என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
ஆனது
ஐப் பிரிக்கக்கூடியது.