1768
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1730கள் 1740கள் 1750கள் - 1760கள் - 1770கள் 1780கள் 1790கள் |
| ஆண்டுகள்: | 1765 1766 1767 - 1768 - 1769 1770 1771 |
| 1768 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1768 MDCCLXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1799 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2521 |
| சீன நாட்காட்டி | 4464-4465 |
| எபிரேய நாட்காட்டி | 5527-5528 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1823-1824 1690-1691 4869-4870 |
| இரானிய நாட்காட்டி | 1146-1147 |
| இசுலாமிய நாட்காட்டி | 1181 – 1182 |
| ரூனிக் நாட்காட்டி | 2018
|
ஜனவரி 9: பிலிப் ஆஸ்ட்லி சர்க்கஸ்
1768 (MDCCLXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 9 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.
- மே 10 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
- ஆகஸ்ட் 8 - ஜேம்ஸ் குக் தனது முதலாவது நாடுகாண் பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தார்.
- டிசம்பர் 1 - அடிமைகளை ஏற்றிச் சென்ற பிரெடென்ஸ்போர்க் என்ற கப்பல் நோர்வேயில் மூழ்கியது.
- டிசம்பர் 6 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் முதல் பிரதி வெளிவந்தது.
- டிசம்பர் 21 - நேபாளம் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள நாடு தோற்றுவிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை [தொகு]
- கூர்க்காக்கள் நேபாளத்தைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச் 21 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1830)