இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இதழ்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதழ் அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். அனைத்தையும் இதழ்கள் என்று பொதுச்சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] காலப் பகுப்பு

இதழ்களை வெளி வரும் கால அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றனர்.

  1. நாளிதழ்கள்
  2. பருவ இதழ்கள்

[தொகு] நாளிதழ்கள்

ஒவ்வொரு நாளும் செய்திகளுடன் வெளிவரும் செய்தித்தாள்கள் நாளிதழ்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இவை நாள்தோறும் வெளியாகும் நேரத்தைக் கொண்டு இரு வகையாகப் பகுக்கப்படுகிறது. அவை;

  1. காலை நாளிதழ்
  2. மாலை நாளிதழ்

[தொகு] காலை நாளிதழ்

ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் காலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரவில் அச்சிடப்பட்டு காலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் நடைபெற்ற பல செய்திகள் அதிகம் இடம் பிடிக்கின்றன.

[தொகு] மாலை நாளிதழ்

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வெளியாகும் நாளிதழ்கள் மாலை நாளிதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பகலில் அச்சிடப்பட்டு மாலை நேரத்தில் விற்பனைக்கு வருகின்றன. இந்த நாளிதழ்களில் முதல் நாள் மதியத்திற்குப் பின் நடைபெற்ற பல செய்திகள், சில காலை நேரச் செய்திகள் போன்றவை இடம் பிடிக்கின்றன.

[தொகு] பருவ இதழ்கள்

குறிப்பிட்ட கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் பருவ இதழ்கள் எனப்படுகின்றன. வாரம், மாதமிருமுறை, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனும் கால அளவைக் கொண்டு வெளியாகும் இதழ்கள் அனைத்தும் பருவ இதழ்களாகும். இவை வெளியாகும் கால அளவைப் பொறுத்து வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ், காலாண்டு இதழ், அரையாண்டு இதழ், ஆண்டு இதழ் என அழைக்கப்படுகின்றன.

[தொகு] உள்ளடக்கப் பகுப்பு

இதழ்களில் இடம் பெற்றிருக்கும் செய்திகள், படைப்புகள் அடிப்படையில இதழ்களைப் பல வகைகளில் பிரிக்கலாம்.

  1. இலக்கிய இதழ் -இலக்கியத் தகவல்களை மட்டும் உள்ளடக்கசமாகக் கொண்டவை
  2. அரசியல் இதழ் - அரசியல் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  3. கவிதை இதழ் - கவிதைகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  4. சிறுவர் இதழ் - சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  5. அறிவியல் இதழ் - அறிவியல் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை-கலைக்கதிர்
  6. மருத்துவ இதழ் - மருத்துவச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  7. கல்வி இதழ் - கல்வித் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  8. பெண்கள் இதழ் - பெண்களுக்கான செய்திகள மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  9. தொழில் இதழ் - தொழில் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  10. வணிக இதழ் - வணிகச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  11. விளையாட்டு இதழ் - விளையாட்டுச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  12. செய்தி இதழ் - செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  13. சோதிட இதழ் - சோதிடத் தகவல்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  14. சமய இதழ் - சமயச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  15. திரைப்பட இதழ் - திரைப்படச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  16. புலனாய்வு இதழ் - குற்றப் புலனாய்வுச் செய்திகளை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  17. புதின இதழ் - புதினங்களை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை
  18. பொழுதுபோக்கு இதழ் - பொழுதுபோக்கிற்கான செய்தி மற்றும் பல தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டவை

-இப்படி இதழ்களை இந்தப் பகுப்பின் கீழ் மேலும் பல வகைப்படுத்தலாம்.

[தொகு] தன்மைப் பகுப்பு

இதழ்கள் யாரை வாசகர்களாகக் கொண்டு வெளியிடப்படுகின்றன என்ற தன்மையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. தரமான இதழ்கள் - பொருள் நிறைந்த தகவல்களைக் கொண்டு புலமைமிக்கவர்கள் படிக்கக்கூடிய வகையில் உள்ள இதழ்கள்
  2. மக்கள் இதழ்கள் - அனைத்து வகையான மக்களும் எளிதாகப் படிக்கக் கூடியதாக உள்ள அனைத்து இதழ்கள்
  3. நச்சு இதழ்கள் - படிக்கின்றவர்களின் மனத்தைப் பாதிக்கக் கூடிய செய்தி, கதை, கட்டுரைகளைக் கொண்ட இதழ்கள். இவை “மஞ்சள் இதழ்கள்” என்றும் சொல்லப்படுகின்றன.

[தொகு] தமிழ் இதழ் வரலாறு

[தொகு] முற்கால நாளிதழ்கள்

  • சுதேச பரிபாலினி (1904) பதிப்பாசிரியர்: ரங்கூன் பி. இ. முதலியாரால் சுதேச பரிபாலினி அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
  • திராவிடன் (1916) ஆசிரியர்: சனக். சன்கர கண்ணப்பர், சென்னை
  • தமிழ்நாடு (1927) ஆசிரியர்:'சி. இராமச்சந்திர நாயுடு, சென்னை
  • வீரகேசரி (1930) ஆசிரியர்: எச். செல்லையா, கொழும்பு
  • சுதர்மம் (1933) ஆசிரியர்: ஆ. சக்திவேற்பிள்ளை, செட்டி நாடு
  • செயபாரதி (1936) ஆசிரியர்: எஸ். வேங்கட்டராமன், சென்னை
  • தந்தி (1942) சி. பா. ஆதித்தனார், மதுரை

[தொகு] முற்கால திங்கள் இதழ்கள்

  • சைவ உதயபானு (1882) ஆசிரியர்: சரவணமுத்துப் பிள்ளை, யாழ்ப்பாணம்
  • மகாவிகட தூதன் (1886)
  • தீனுல் இஸ்லாம் (1957) கொழும்பு

என 346 திங்களிதழ்களையும் பிற இதழ்களையும் பற்றி திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக, சென்னை, பழந்தமிழ் இதழ்கள் - ஒரு பார்வை என ஒரு நூல் 2001 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=இதழ்&oldid=1119122" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்