ஆலிசின் அற்புத உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலிஸ்

ஆலிஸின் அற்புத உலகம் (ஆங்கிலத்தில் Alice's Adventures in Wonderland என்றும் Alice in Wonderland என்றும் அழைக்கப்படுகிறது), பிரித்தானிய கணிதவல்லுனரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான, லூயி கரோலினால் எழுதப்பட்ட நூல். தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது[1].

இது குழந்தைகளுக்கான இலக்கியத்தில் மிகச் சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. ஆலிஸின் அற்புத உலகம், குழந்தைகளுக்கான படைப்பு என்று அழைக்கப்பட்டாலும், இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப் படுகிறது.

[தொகு] சுட்டிகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. ஆலீஸின் அற்புத உலகம், லூயிகரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், முதல் பதிப்பு, அக்டோபர் 2008, விஜயா பதிப்பகம், கோவை-1

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்