பவுல் பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பவுல் பியா

மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் பியா (2009)

கமரூன் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 நவம்பர் 1982
பிரதமர் பெல்லோ பௌபா மைகாரி
லூக் அயாங்
சடௌ ஹயாடௌ
சைமன் அச்சிடி அச்சு
பீட்டர் மஃபானி முசோஞ்ஜ்
எப்ரைஹ்ம் இனோனி
பிலெமோன் யாங்
முன்னவர் அகமதௌ அஹிட்ஜோ

கமரூன் பிரதமர்
பதவியில்
30 சூன் 1975 – 6 நவம்பர் 1982
குடியரசுத் தலைவர் அகமதௌ அஹிட்ஜோ
முன்னவர் Simon Pierre Tchoungui (East Cameroon)
Salomon Tandeng Muna (West Cameroon)
பின்வந்தவர் பெல்லோ பௌபா மைகாரி
அரசியல் கட்சி People's Democratic Movement

பிறப்பு 13 பெப்ரவரி 1933 (1933-02-13) (அகவை 81)
முவோமெக்கா, பிரெஞ்சு கமரூன்
(தற்போதைய கமரூன்)
வாழ்க்கைத்
துணை
Jeanne-Irène Biya (Before 1992)
Chantal Vigouroux (1994–present)
பயின்ற கல்விசாலை National School of Administration
Paris Institute of Political Studies
சமயம் Roman Catholicism[1]

பவுல் பியா (Paul Biya, இயற்்பெயர்: பவுல் பார்த்தலெமி பியா பை முவோன்டோ, பெப்ரவரி 13, 1933) நவம்பர் 6, 1982 முதல் தொடர்ந்து ஆறு முறை கமரூனின் குடியரசுத் தலைவராக இருந்து வரும் அரசியல்வாதி ஆவார். [2][3] தெற்கு கமரூனின் முவோமெக்காவில் பிறந்த பியா 1960களில் குடியரசுத் தலைவர் அகமதௌ அஹிட்ஜோவின் தலைமையில் அரசு அதிகாரியாக விரைவான முன்னேற்றம் கண்டார். 1968 முதல் 1975 வரை குடியரசுத் தலைவரின் தலைமைச் செயலாளராகவும் பின்னர் கமரூனின் பிரதமராக 1975 முதல் 1982 வரையும் பணியாற்றினார். 1982ஆம் ஆண்டில் அஹிட்ஜோவின் திடீர் பதவி விலகலை அடுத்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பியா 1983-84 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டார்.

1980களில் ஒருக்கட்சி அரசியல்முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1990களில் எழுந்த எதிர்ப்புகளுக்கிணங்க பல கட்சி அரசியலை அறிமுகப்படுத்தினார். 1992ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் குறைந்த வாக்கெண்ணிக்கையில் தேர்வான பியா 1997, 2004 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். இந்த தேர்தல்களில் அனைத்திலுமே முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஏமாற்றி பதவியில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கமரூனின் முன்னாள் காலனித்துவ நாடான பிரான்சுடன் மிக அண்மித்த தொடர்பை பியா பராமரித்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
சைமன் பியர்ரி சோங்கு
as கிழக்கு கமரூனின் பிரதமர்
கமரூன் பிரதமர்
1975–1982
பின்னர்
பெல்லோ பௌபா மைகாரி
முன்னர்
சாலோமோன் டான்டெங் முனா
as மேற்கு கமரூனின் பிரதமர்
முன்னர்
அகமதௌ அஹிட்ஜோ
கமரூன் குடியரசுத் தலைவர்
1982–present
பதவியில் உள்ளார்


"http://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_பியா&oldid=1365998" இருந்து மீள்விக்கப்பட்டது