தோமஸ் மால்தஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமஸ் மால்தஸ்
தோமஸ் மால்தஸ்
பிறப்பு(1766-02-13)13 பெப்ரவரி 1766
சரே, இங்கிலாந்து
இறப்பு29 திசம்பர் 1834(1834-12-29) (அகவை 68)
பாத், இங்கிலாந்து

தோமஸ் ராபர்ட் மால்தஸ் (Thomas Robert Malthus, பிப்ரவரி 13,1766 - டிசம்பர் 29, 1834) இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர், அரசியல் பொருளாதார ஆய்வாளர் மற்றும் மக்கள்தொகை ஆய்வாளர் ஆவார். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பு ஒன்றை வழங்கினார்.

மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை[தொகு]

முதன்மைக் கட்டுரை: மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை

மக்கள் தொகைப்பெருக்கம் எப்போதும் உணவு உற்பத்தி மற்றும் பகிர்தலை விட அதிகளவாகவே இருக்கும். மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை என்ற நூலின் அடிப்படைக் கருத்தாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமஸ்_மால்தஸ்&oldid=3858044" இலிருந்து மீள்விக்கப்பட்டது