கே. ஏ. தங்கவேலு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கே. ஏ. தங்கவேலு | |
|---|---|
| பிறப்பு | திருமலராஜன்பட்டினம், காரைக்கால், பாண்டிச்சேரி, இந்தியா |
| பணி | நடிகர், நகைச்சுவையாளர், பின்னணிப் பாடகர் |
| வாழ்க்கைத் துணை | எம். சரோஜா |
| பிள்ளைகள் | சுமதி |
கே. ஏ. தங்கவேலு (இறப்பு: 28 செப்டம்பர், 1994[1]), மக்களால் செல்லமாக டணால் தங்கவேலு என்று அழைக்கப்படுபவர். 1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இவர் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவையாகும். இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
இல்வாழ்க்கை [தொகு]
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.
திரைப்படங்கள் [தொகு]
- சிங்காரி (1951)
- அமரகவி (1952)
- கலியுகம் (1952)
- பணம் (1952)
- அன்பு (1952)
- திரும்பி பார் (1952)
- பணக்காரி (1953)
- இல்லற ஜோதி (1954)
- சுகம் எங்கே (1954)
- நண்பன் (1954)
- பணம் படுத்தும் பாடு (1954)
- பொன் வயல் (1954)
- போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
- விளையாட்டு பிள்ளை (1954)
- வைர மாலை (1954)
- உலகம் பலவிதம் (1955)
- எல்லாம் இன்பமயம் (1955)
- கதாநாயகி (1955)
- குலேபகாவலி (1955)
- கோடீஸ்வரன் (1955)
- கோமதியின் காதலன் (1955)
- செல்ல பிள்ளை (1955)
- மகேஸ்வரி (1955)
- மங்கையர் திலகம் (1955)
- மேதாவிகள் (1955)
- மிஸ்ஸியம்மா (1955)
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1955)
- அமர தீபம் (1956)
- காலம் மாறிப்போச்சு (1956)
- குடும்ப விளக்கு (1956)
- நல்ல வீடு (1956)
- நாக பஞ்சமி (1956)
- மர்ம வீரன் (1956)
- மாதர்குல மாணிக்கம் (1956)
- அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
- அம்பிகாபதி (1957)
- எங்க வீட்டு மகாலக்ஷ்மி (1957)
- கற்புக்கரசி (1957)
- சக்ரவர்த்தி திருமகள் (1957)
- சௌபாக்கியவதி (1957)
- நீலமலை திருடன் (1957)
- பக்த மார்க்கண்டேயா (1957)
- பாக்யவதி (1957)
- மல்லிகா (1957)
- மாயா பஜார் (1957)
- வனங்காமுடி (1957)
- உத்தம புத்திரன் (1958)
- கடன் வாங்கி கல்யாணம் (1958)
- கன்னியின் சபதம் (1958)
- காத்தவராயன் (1958)
- செஞ்சுலக்ஷ்மி (1958)
- Neelavukku நிறஞ்ச மனசு (1958)
- பூலோக ரம்பை (1958)
- மனமுள்ள மறுதரம் (1958)
- மாங்கல்ய பாக்கியம் (1958)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- கல்யாண பரிசு (1959)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
- நான் சொல்லும் ரகசியம் (1959)
- மஞ்சள் மகிமை (1959)
- அடுத்த வீட்டு பெண் (1960)
- அன்பிற்கோர் அண்ணி (1960)
- இரும்புத்திரை (1960)
- கடவுளின் குழந்தை (1960)
- கைதி கண்ணாயிரம் (1960)
- கைராசி (1960)
- தங்கம் மனசு தங்கம் (1960)
- தங்கரத்தினம் (1960)
- தெய்வ பிறவி (1960)
- நான் கண்ட சொர்க்கம் (1960)
- பாட்டாளியின் வெற்றி (1960)
- புதிய பாதை (1960)
- மீண்ட சொர்க்கம் (1960)
- அரசிளங்குமாரி (1961)
- திருடாதே (1961)
- பாசமலர் (1961)
- எங்க வீட்டு பெண் (1965)
- Konte pilla (1967)
- உயிர் மேல் ஆசை (1967)
- ராஜாத்தி (1967)
- தில்லானா மோகனாம்பாள் (1968)
- நம் நாடு (1969)
- வியட்நாம் வீடு (1970)