உள்ளடக்கத்துக்குச் செல்

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பி. பானுமதி
பி. எஸ். வீரப்பா
வெளியீடு1955
ஓட்டம்160 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது.

நடிகர்கள்

[தொகு]

இந்த படத்தில் நடிக்க எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறான் மரவெட்டி அலிபாபா (எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள்.

ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறான். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறான் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறான் அலிபாபா. ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர்.

அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம் (எம். ஜி. சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறான் அலிபாபா.

பின்னர், பேராசை கொண்ட காசிம், அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து உள்ளவே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம். மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறான். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறான் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான். அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத்துவங்கினர்.

செருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே மீதிக் கதையாகும்.

இசை / பாடல்கள்

[தொகு]

மதுரகாசி எழுதிய பாடல்களுக்கு[3][4], சுசர்லா தக்சிணாமூர்த்தி இசை அமைத்தார்.[5]

  1. மாசிலா உண்மை காதலி
  2. சின்னஞ்சிறு சிட்டே
  3. அழகான பொண்ணு நான்
  4. நாம ஆடுவதும்
  5. உன்னைவிட மாட்டேன்
  6. உல்லாச உலகம்
  7. ஸலாம் பாபு
  8. அன்பினாலே ஆளவந்த
  9. என் ஆட்டமெல்லாம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kannan 2017, p. 69".
  2. "RajadhyakshaWillemen1998".
  3. "http://play.raaga.com". Archived from the original on 2014-11-21. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24. {{cite web}}: External link in |title= (help)CS1 maint: unfit URL (link)
  4. "tinypic.com".
  5. "Baskaran1996".

வெளி இணைப்புகள்

[தொகு]