காவ்ரீலோ பிரின்சிப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காவ்ரீலோ பிரின்சிப் | |
|---|---|
டெரெசின் சிறையில் காவ்ரீலோ பிரின்சிப் |
|
| பிறப்பு | சூலை 25, 1894 ஓப்லயாய், போசுனியா எர்சகோவினா (1878-1918), ஆஸ்திரியா-அங்கேரி |
| இறப்பு | ஏப்ரல் 28 1918 (அகவை 23) டெரெசின், பொஃகீமியா, ஆஸ்திரியா-அங்கேரி |
| தேசியம் | யூகோசுலாவியர் |
| இனம் | செர்பியர் |
காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip) (செர்பிய மொழி: Гаврило Принцип; சூலை 25, 1894 [1] – 28 ஏப்ரல் 1918) ஓர் போசுனிய செர்பியர். இளம் போசுனியா எனப் பொருள்படும் ம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர்.[2] சாரயேவோவில் 28 சூன், 1914ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவி சோபியும் காரில் சென்ற போது அவனது கூட்டாளி சுடத்தவறுகையில் பிரின்சிப் சுட்டுக் கொன்றான்.[3] பிரின்சிப்பும் அவன் கூட்டாளியும் கைது செய்யப்பட்டபோது இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. [4] இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின. [5]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Vladimir Dedijer, The Road to Sarajevo, Simon and Schuster, 1966, pp. 187–188.
- ↑ Dejan Djokić. Yugoslavism: histories of a failed idea, 1918-1992. London, England, UK: C. Hurst & Co. Ltd, 2003. Pp. 24.
- ↑ Johnson i, CA, Lonnie (1989). Introducing Austria: A short history. pp. 52–54. ISBN 0-929497-03-1.
- ↑ Gilbert, Martin (1995). First World War. HarperCollins. pp. 20–24. ISBN 0006376665.
- ↑ Strachan, Hew (1998). The Oxford Illustrated History of the First World War. Oxford University Press. p. 9. ISBN 0198206143.
மேலும் பார்க்க [தொகு]
- Wolfson, Robert; Laver, John (2001-12-30). Years of Change, European History 1890-1990 (3 ed.). Hodder Murray. p. 117. ISBN 0340775262.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் காவ்ரீலோ பிரின்சிப் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Gavrilo Princip article at Schoolnet.co.uk
- Who's Who in World War I Gavrilo Princip at firstworldwar.com