டி. ஏ. மதுரம்
| டி.ஏ. மதுரம் | |
|---|---|
| பிறப்பு | 1918 ஸ்ரீரங்கம், தமிழ்நாடு,இந்தியா |
| இறப்பு | மே,1974 இந்தியா |
| பணி | திரைப்பட நடிகை |
| வாழ்க்கைத் துணை | என். எஸ். கிருஷ்ணன் |
டி.ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.
திருச்சியில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார். மதுரத்தின் கலை வாழ்க்கையும் வாய்ப்புகளும் அவரது கணவரும் திரைப்பட நடிகருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் இணைவால் மலர்ச்சி பெற்றன. ஆனால் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப் பிரவேசம் செய்துவிட்டார்.அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, டி.ஆர்.ஏ. மதுரம். ‘ஆர்' சென்றபிறகுதான் அவரது திரைவாழ்க்கை திருப்பம் கண்டது.
திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் புனேவில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார்.அந்த நாள் முதல் அவரின் இணையாகவே நடித்துள்ளார்.நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.
திரைப்படங்கள் [தொகு]
- ‘பக்த துளசிதாஸ்' (1937)
- அம்பிகாபதி (1937)
- ஆர்யமாலா(1941)
- சிவகவி(1943)
- மங்கம்மா சபதம் (1943)
- ஹரிதாஸ் (1944)
- பூம்பாவை (1944)
- பர்த்திருஹரி (1944)
- கண்ணகி
- மனோன்மணி
- பைத்தியக்காரன்(1947)
- ரத்னகுமார் (1949)
- மங்கையர்க்கரசி (1949)
- இன்பவல்லி (சம்பளமே எலுமிச்ச சம்பளமே பாடல் புகழ்பெற்றது-(1949),
- பாரிஜாதம் (1950)
- லைலா மஜ்னு (1950)
- வனசுந்தரி (1951)
- நல்லதம்பி - ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி' படத்தில் வராத மறக்க முடியாத பாடல்
- சந்திரலேகா
- பணம் (1952)
- மாயாமச்சீந்திரா
- ஜோதி ராமலிங்க ஸ்வாமிகள்
- நவீன விக்ரமாதித்யன்
- பிரகலாதா
- வேதவதி அல்லது சீதா ஜனனம்,
- அசோக் குமார்
*(முழுமையான பட்டியல் அல்ல)
வாழ்க்கை சிறுதுளிகள் [தொகு]
டிசம்பர்,1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கோவை சென்டிரல் ஸ்டூடியோவிலிருந்த அசோகா பிக்சர்ஸ் அலுவலகத்தில் கிருஷ்ணனும் மதுரமும் கதை விவாதத்தில் இருந்தபோது கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணன் இரண்டு வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்த பின், ஏப்ரல் 25, 1947 அன்று விடுவிக்கப்பட்டார்.
1951 செப்டம்பரில் கிருஷ்ணனும் மதுரமும் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணம் செய்து வந்திருந்தார்கள்.
தமிழ்த் திரையின் முன்னணி சிரிப்பு ஜோடி என்று கிருஷ்ணன் - மதுரம் உருவாகிய காலகட்டத்தில்,கிருஷ்ணன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் ‘மதுரபவனம்' என்ற நவீன மாளிகை கட்டினார்.மதுரத்தின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில், அம்மாமண்டபம் அருகில் அவருக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்து, அதற்கு ‘கிருஷ்ண பவனம்' என்று பெயரிட்டார்.
மதுரம், மே 1974ல் காலமானார்.