டி. எஸ். துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி. எஸ். துரைராஜ்
பிறப்பு துரைராஜ்
டிசம்பர் 31, 1910
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு தெரியவில்லை
பணி நாட்க, திரைப்பட நடிகர்

டி. எஸ். துரைராஜ் (பிறப்பு: 31 டிசம்பர் 1910 - ) 1940கள்-50களில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1][2]. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார்[3].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்[4] மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார்.[4]

நாடகங்களில்[தொகு]

மதுரையில் அப்போது சங்கரதாசு சுவாமிகள் தனது நாடகக் கம்பனியை ஆரம்பித்து நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்த துரைராஜ் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். இவருக்கு நிறையப் பாடும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. கோமாளி, மற்றும் பெண்கள் வேடங்களிலும் நடித்து வந்தார்.

துரைராஜின் இரண்டாவது சகோதரிக்கு இலங்கையில் திருமணம் நடந்தது. சகோதரியுடன் இலங்கை சென்ற துரைராஜ் அங்கு சிங்கள நாடகக் கம்பனி ஒன்றில் சேர்ந்து நாடகங்கள் நடித்தார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மதுரை திரும்பி மீண்டும் சங்கரதாசு சுவாமிகளின் கம்பனியில் இணைந்து நடித்தார்.[4] சில ஆண்டுகளில் அவர் அக்கம்பனியில் இருந்து விலகி சொந்தமாக திருப்பூரில் "மதுரை ஒரிஜினல் மணிவாசக பால சபா" என்ற நாடகக் கம்பனியைத் தொடங்கினார். கோவை, திருப்பூர், கேரளம் ஆகிய பகுதிகளில் இக்கம்பனிக்கு நல்ல வரவேற்பிருந்தது. ஆனாலும் நான்கு ஆண்டுகளில் கம்பனி பெரும் நட்டத்துக்குள்ளாகி மூடப்பட்டது. பின்னர் அவர் வேலுக்குட்டி நாயர் என்பவரின் மலையாள நாடகக் கம்பனியில் சேர்ந்து நல்ல புகழ் பெற்றார்.[4]

உசாத்துணைகள்[தொகு]

  1. "தி இந்து நாளிதழில்". தி இந்து. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2013.
  2. "தி இந்து நாளிதழ்". தி இந்து. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2013.
  3. "பாய்ஸ் நாடகக் குழுவில் நடிப்பு". தி இந்து. பார்த்த நாள் ஏப்ரல் 26, 2013.
  4. 4.0 4.1 4.2 4.3 "காமெடியன் டி. எஸ். துரைராஜ்". பேசும் படம். நவம்பர் 1951. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._துரைராஜ்&oldid=1714044" இருந்து மீள்விக்கப்பட்டது