பால் ஏர்டோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பால் ஏர்டோசு (Erdős Pál) | ||
|---|---|---|
1992-ல் புடாபெசுட்டில் ஒரு மாணவர் கருத்தரங்கின்போது |
||
| பிறப்பு | மார்ச்சு 26, 1913 | |
| பிறப்பிடம் | புடாபெசுட்டு, அங்கேரி | |
| இறப்பு | செப்டம்பர் 20 1996 (அகவை 83) |
|
| இறப்பிடம் | வார்சா, போலந்து | |
| வாழிடம் | அங்கேரி ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா இசுரேல், மற்றபடி தொடர்பயணம் |
|
| தேசியம் | ||
| துறை | கணிதம் | |
| பணி நிறுவனம் | Princeton Purdue Notre Dame Then itinerant |
|
| பல்கலைக்கழகம் | University of Pázmány Péter | |
| ஆய்வு நெறியாளர் | Leopold Fejér | |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
Bonifac Donat Joseph Kruskal Alexander Soifer |
|
| அறியப்படுவது | சேர்வியல் கோலவியல் எண் கோட்பாடு |
|
| விருதுகள் | Wolf Prize (1983/84) AMS Cole Prize (1951) |
|
| பிற குறிப்பு | இவரது ஏர்டோசு எண் சுழியம் | |
பால் ஏர்டோசு (மார்ச்சு 26, 1913 - செப்டம்பர் 20, 1996) வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐநூறுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐநூறுக்கும் கூடுதலான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார்.